மேலும் அறிய

IPL Points Table: ஐதராபாத்தை வெச்சு செய்த டெல்லி.! புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லி அணி பெற்ற த்ரில் வெற்றி, புள்ளிப்பட்டியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லி அணி பெற்ற த்ரில் வெற்றி, புள்ளிப்பட்டியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபிஎல் சீசன்:

16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 34 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அடிப்படையான புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.

நேற்றைய போட்டி:

ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய லீக் போட்டியில் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.  டெல்லி அணி நிர்ணயித்த 145 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல், 137 ரன்கள் மட்டுமே எடுத்து ஐதராபாத் அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
சென்னை 7 5 2 10
ராஜஸ்தான் 7 4 3 8
லக்னோ 7 4 3 8
குஜராத் 6 4 2 8
பெங்களூரு 7 4 3 8
பஞ்சாப் 7 4 3 8
மும்பை 6 3 3 6
கொல்கத்தா 7 2 5 4
ஐதராபாத் 7 2 5 4
டெல்லி 7 2 5 4

முதல் நான்கு இடங்களில் யார்?

சென்னை அணி நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான், லக்னோ, குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.  முன் எப்போதும் இல்லாத அளவில் அணிகளுக்கு இடையே முதல் 4 இடங்களை பிடிக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ரன் ரேட் முக்கிய பங்காற்றி வருகிறது. பிளே-ஆஃப் சுற்றுக்குள் எந்த அணிகள் நுழையும் என்பதையும் இந்த முறை ரன் ரேட் தான் நிர்ணயிக்கும் என கருதப்படுகிறது. 

மற்ற அணிகளின் நிலை:

மும்பை அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்க கொல்கத்தா, ஐதாராபாத் மற்றும் டெல்லி ஆகிய அணிகள்  தலா 4 புள்ளிகள் உடன், புள்ளிப்பட்டியலில் முறையே 8 முதல் 10வது இடங்களில் நீடிக்கின்றன.

இன்றைய போட்டி:

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இன்றைய லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மோத உள்ளது. இதில் மும்பை அணி அபார வெற்றி பெற்றால்,  புள்ளிப்பட்டியலில் அதிகபட்சம் 5வது இடம் வரையில் முன்னேறலாம். குஜராத் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேற முடியும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget