மேலும் அறிய

Points Table IPL 2023: ஹாரி ப்ரூக்ஸ் அதிரடி சதம்..ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஐதராபாத்திற்கு எந்த இடம்?

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஐதராபாத் அணி, கொல்கத்தா அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மேலும் 2 புள்ளிகளை சேர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஐதராபாத் அணி, கொல்கத்தா அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மேலும் 2 புள்ளிகளை சேர்த்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் சீசன்:

16வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களிலும், தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 19 லீக் போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக அணிகள் முட்டி மோதி வருகின்றன.

Points Table IPL 2023: ஹாரி ப்ரூக்ஸ் அதிரடி சதம்..ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஐதராபாத்திற்கு எந்த இடம்?

நேற்றைய போட்டி:

ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணி எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அரைசதம் விளாசினர். ஆனாலும் அந்த அணியால்  7 விக்கெட்டுகளை இழந்து 205 மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது நடப்பு தொடரில் அந்த அணி பெறும் இரண்டாவது வெற்றி ஆகும்.  இதனால், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களுக்கு மாற்றம் கண்டுள்ளன உள்ளன என்பதை தற்போது அறியலாம்.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
ராஜஸ்தான் 4 3 1 6
லக்னோ 4 3 1 6
குஜராத் 4 3 1 6
கொல்கத்தா 4 2 2 4
சென்னை 4 2 2 4
பஞ்சாப் 4 2 2 4
ஐதராபாத் 4 2 2 4
பெங்களூரு 3 1 2 2
மும்பை 3 1 2 2
டெல்லி 4 0 4 1

முதல் நான்கு இடங்களில் யார்?

ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடி, தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட அணிகள் தலா 6 புள்ளிகளை பெற்று இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. கொல்கத்தா மற்றும் சென்னை அணி தலா 4 போட்டிகளிலும் விளையாடி தலா இரண்டில் வெற்றி பெற்று, ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளன. பஞ்சாப் அணியும் விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 6வது இடத்தில் நீடிக்கிறது. புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் ஐதராபாத் அணி, நேற்றைய வெற்றியின் மூலம் 4 புள்ளிகள் உடன் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் விளையாடிய 3 போட்டிகளில் தலா ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் முறையே 8 மற்றும் 9வது இடங்களை ஆக்கிரமித்துள்ளன. டெல்லி அணி விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை கண்டு, முறையே கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன. 

இன்றைய போட்டி:

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டூப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூரு மற்றும் வார்னர் தலைமையிலான டெல்லி ஆகிய அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி தனது கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. டெல்லி அணியோ நடப்பு தொடரில் விளையாடிய நான்கிலும் தோல்வி கண்டு, இன்னும் வெற்றிக்கணக்கையே தொடங்கவில்லை. இதனால், இன்றைய போட்டியின் முடிவு புள்ளிப்பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. அதேநேரம், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ மற்றும் தவான் தலைமையிலான பஞ்சாப் அணிகள் மோதும் போட்டியின் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Embed widget