PBKS vs GT IPL 2023: அணிக்கு திரும்பும் ஹர்திக் பாண்டியா.. ஃபார்மை தொடருவாரா தவான்..? முழு அணி ஒரு பார்வை!
குஜராத் அணியை பொறுத்தவரை, கேப்டன் ஹர்திக் பாண்டியா உடல்நிலை சரியாகி மீண்டும் விளையாடும் லெவன் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஒற்றை சிங்கமாக நின்ற ஷிகர் தவான் 99 ரன்கள் குவித்து, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வெற்றியை தேடி தர போராடினார். இருப்பினும், பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய தவறியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விட்டுகொடுத்து, தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், இரு அணிகளும் தோல்வியுடன் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. இந்த போட்டியானது இரவு 7 மணிக்கு மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
குஜராத் அணியை பொறுத்தவரை, கேப்டன் ஹர்திக் பாண்டியா உடல்நிலை சரியாகி மீண்டும் விளையாடும் லெவன் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அதிரடி பேட்ஸ்மேன் லியாம் லிவிங்ஸ்டோனும் பஞ்சாப் அணியில் இன்று இணைகிறார். கடந்த போட்டியில் தமிழக வீரர்களான விஜய் சங்கர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் ஃபார்ம் குஜராத்தின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். பஞ்சாப் அணிக்காக ககிசோ ரபாடா இந்த சீசனின் முதல் ஆட்டத்தை விளையாட வாய்ப்பு உள்ளது.
PBKS vs GT போட்டி விவரங்கள்:
- பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், (போட்டி 18) ஐபிஎல் 2023
- இடம்: பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் IS பிந்த்ரா ஸ்டேடியம், மொஹாலி
- தேதி & நேரம்: வியாழன், ஏப்ரல் 13, மாலை 7:30 மணி
- டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா
பிட்ச் அறிக்கை:
மொஹாலி ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாக இருக்கும். இதன் காரணமாக இரு இன்னிங்ஸிலும் அதிக ஸ்கோரை எதிர்பார்க்கலாம். டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும். 210 ரன்களுக்கு மேல் குவித்தால் முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றிபெற அதிக வாய்ப்பு
கணிக்கப்பட்ட இரு அணி விவரங்கள்:
பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்):
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் குர்ரான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்
குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி):
விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்
இன்று யார் சிறந்து விளங்குவார்..?
ஷிகர் தவான்:
பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் தற்போது ஐபிஎல் 2023 ஆரஞ்சு கேப் பட்டியலில் மூன்று போட்டிகளில் 225 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் . அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவருக்கு இப்போது மிடில் பேட்ஸ்மேன்களின் பார்ம் மட்டுமே தேவையாக உள்ளது. லிவிங்ஸ்டன் அணிக்கு திரும்புவதால் பலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷித் கான்:
சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் கடந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்து எங்கோ போன போட்டியை திருப்பினார். தொடர்ந்து, இதேபோல் பந்து வீசினால் பர்பிள் கேப்பை வெல்வதோடு குஜராத் அணிக்கு மிகப்பெரிய பலமாகவும் இருப்பார்.
இன்றைய போட்டி கணிப்பு: இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே வெற்றிபெறும்.