மேலும் அறிய

CSK vs PBKS, IPL 2023: அடுத்த தோல்வி யாருக்கு?..சென்னை, பஞ்சாபின் பிளேயிங் லெவன் இதோ..!

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை - பஞ்சாப் அணிகள் மோதல்:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தோனி தலைமையிலான சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம். இந்த போட்டியானது மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் இரு அணிகளும், தோல்வியை சந்தித்த நிலையில், இன்றைய போட்டியில் வென்று வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் இரு அணிகள் சார்பில் இன்று விளையாட உள்ள வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வீரர்கள்:

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், மஹீஷ் தீக்ஷனா

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

ஆகாஷ் சிங், த்வெயின் ப்ரெடோரியஸ்,சேனாபதி, ரஷீத், ஹங்கர்கேகர்

பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) வீரர்கள்:

அதர்வா டெய்டே, ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீட் பிரார்

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

ப்ரப்சிம்ரன் சிங், ஷர்ட், ரிஷி தவான், மோஹித் ரதி, சிவம் சிங்

சென்னை அணியின் பலம், பலவீனம்.? 

இந்த சீசனில் சென்னை அணிக்காக கான்வே, ருதுராஜ் கெய்க்வார், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே ஆகியோர் ரன் குவித்து வருகின்றனர். அதேபோல், அம்பத்தி ராயுடு மற்றும் ஜடேஜா இன்னும் பேட்டிங்கில் தங்களது பார்மை கொண்டு வரவில்லை. ஜடேஜா பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.  வேகப்பந்துவீச்சில் தீபக் சாஹர் இல்லாத நிலையில், துஷார் தேஷ்பாண்டே 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், அதிக ரன்களை தாரை வார்ப்பது கவலை அளிக்கிறது. 

பஞ்சாபின் பலம், பலவீனம் என்ன? 

பஞ்சாப் அணியின் பிரச்சனை நிலைத்தன்மை இல்லாததுதான். காயத்திலிருந்து மீண்ட கேப்டன் ஷிகர் தவான் அணிக்கு திரும்பியும் பயனில்லை. இன்றைய போட்டியில் தவான், பிரப்சிம்ரன் சிங், அதர்வா டெய்டே ஆகியோர் ரன் குவிக்க வேண்டும். சாம் கர்ரன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கி வருகின்றார். அதேபோல், அர்ஷ்தீப் சிங் மற்றும் ககிசோ ரபாடா வேகத்தில் மிரட்டலாம். ஒவ்வொரு போட்டியிலும் பிளேயிங் லெவன் மற்றப்படுவதும் பஞ்சாப் அணியின் நிலையற்ற தன்மையை காட்டுகிறது. கடைசியாக விளையாடிய லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில், 257 ரன்களை பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget