Watch Video: அம்மாடியோவ்..! ஒரே சிக்ஸரில் பெங்களூருவை வாயடைக்க வைத்த நேஹல் வதேரா..! யார் இந்த இளம்வீரர்..?
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மைதானத்திற்கு வெளியே அடித்த சிக்சரின் மூலம், இளம் வீரர் நேஹல் வதேரா ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அடித்த ஒரே சிக்சரின் மூலம், இளம் வீரர் நேஹல் வதேரா ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மும்பை அணியை மீட்ட திலக் - நேஹல்:
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 48 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த திலக் மற்றும் அறிமுக வீரரான நேஹல் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டிற்கு 50 ரன்களை சேர்த்தது.
பிரமாண்ட சிக்ஸ் அடித்த நேஹல்:
போட்டியின் 14வது ஓவரை ஆர்சிபியின் கரண் சர்மா எதிர்கொண்டார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட வதேரா சிக்சரை விளாசினார். அதைதொடர்ந்து, கரண் சர்மா வீசிய மூன்றாவது பந்தை வதேரா தூக்கி அடிக்க, அந்த பந்து வானில் பறந்து மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. அந்த சிக்சர் 101 மீட்டர் தூரத்திற்கு சென்று விழுந்தது. நடப்பு தொடரில் 100 மீட்டர் தூர சிக்சரை விளாசிய முதல் இந்திய வீரர் நேஹல் வதேரா தான். அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய கையோடு, கரண்சர்மா வீசிய அடுத்த பந்திலே கேட்ச் முறையில் அவர் அவுட்டானார். இறுதியில் 13 பந்துகளை எதிர்கொண்ட நேஹல் மும்பை அணிக்காகன முக்கியமான 21 ரன்களை சேர்த்தார்.
A 1⃣0⃣1⃣m maximum followed by a wicket!
— IndianPremierLeague (@IPL) April 2, 2023
Karn Sharma gets Nehal Wadhera who looked in impressive touch 👌👌
The fifty partnership gets broken at the right time for @RCBTweets 💪
Follow the match ▶️ https://t.co/ws391sGhme#TATAIPL | #RCBvMI pic.twitter.com/7rI6T46aTz
யார் இந்த நேஹல்:
19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்காக விளையாடியுள்ள 22 வயதான நேஹல் சர்மாவை, டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது மும்பை. ஆச்சரியம் என்னவென்றால் ஏலத்திற்கு முன்பு வரை அங்கீகரிக்கப்படக்கூடிய டி-20 போட்டிகளில் ஒன்றில் கூட நேஹல் விளையாடியதில்லை. அதோடு மும்பை அணி ஏலத்தில் எடுப்பதற்கு முன்பு வரை, சீனியர் லெவலில் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடியதில்லை. ஏலத்திற்கு பிறகு தான் ரஞ்சி கோப்பையில் பஞ்சாப் அணிக்காக 5 போட்டிகலில் விளையாடினார். அந்த தொடரில் சீனியர் லெவலில் அவர் விளையாடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்து கவனம் ஈர்த்தார். அதே தொடரின் மூன்றாவது போட்டியில் 47 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து பஞ்சாப் தடுமாறிய நிலையில், ஆறாவது விக்கெட்டிற்கு இறங்கி நேஹல் இரட்டை சதம் விளாசினார்.
ஒரே இன்னிங்ஸில் 578 ரன்கள்
முன்னதாக உள்ளூர் போட்டிகளில் தகர்க்க அரிதான மேலும் சாதனையையும் நேஹல் தன்னகத்தே கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பஞ்சாபில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் லூதியானா சார்பில் களமிறங்கிய நேஹல், பதிண்டா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 578 ரன்களை விளாசினார். அதில் 42 பவுண்டரிகள் மற்றும் 37 சிக்சர்களை விளாசினார்.