Mumbai Indians: எலிமினேட்டர் ஆடுனா கப்பில்லை! டாப்-2வில் முடிப்பார்களா மும்பை இந்தியன்ஸ்- ஐபிஎல் 2025
மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் போட்டிகளில் விளையாடி இது வரை கோப்பையை அடித்தததில்லை, இதற்கு முன்னர் 2011, 2012, 2014,2023 ஆகிய சீசன்களில் மும்பை அணி எலிமினேட்டர் போட்டிகளில் விளையாடி உள்ளது

மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ள நிலையில் டாப்-2 இடங்களில் முடிக்க என்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை இந்த தொகுப்பில் காண்போம்
ஐபிஎல் 2025:
இந்தியன் பீரிமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கான அணிகள் முடிவாகியுள்ளது. இதில் குஜராத் டைடன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றில் மோதவுள்ளன. ஒரு சில லீக் போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில் நான்கு அணிக்களுக்குமே டாப்-2 வில் முடிக்க முயற்சி செய்வார்கள்.
மும்பை அணி:
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனை மிக சுமராக ஆரம்பித்தது, முதல் 4 போட்டிகளில் 1 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே மும்பை அணி வென்றிருந்தது. அதன் பின்னர் வெற்றிகளை குவித்து பிளே ஆஃப் சுற்றுக்கு சுலபமாக மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றது. இதில் கடைசி 6 போட்டிகளில் மும்பை அணி தொடர்ச்சியாக வென்று இருந்தது. 13 போட்டிகளில் விளையாடிவுள்ள மும்பை அணி 8-ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் தற்போது புள்ளிப்பட்டியலில் 4-ஆம் இடத்தில் உள்ள நிலையில் மும்பை அணிக்கு இன்னும் ஒரே ஒரு லீக் ஆட்டமே எஞ்சியுள்ளது.
டாப்-2ல் முடிக்க முடியுமா?
மே 26 ஆம் தேதி மும்பை அணி பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது அந்த போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தினாலும் மும்பை இந்தியன்ஸ் அணி 18 புள்ளிகளை எடுக்கும், அதனால் மற்ற அணிகளின் முடிவுகளும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளது. மும்பை அணி டாப் 2 இரண்டில் முடிக்க வேண்டுமென்றால் இரு அணிகளும் தங்களது இறுதி இரண்டு லீக் ஆட்டங்களில் தோற்க வேண்டும். அப்படி இல்லையேன்றால் பஞ்சாப் அல்லது பெங்களூரு அணிகளுக்குள் ஏதாவது ஒரு அணி 1 போட்டியில் தோற்று மற்ற இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைய வேண்டும், மேலும் குஜராத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வி அடைய வேண்டும்.
ராசியில்லாத எலிமினேட்டர் போட்டிகள்:
மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் போட்டிகளில் விளையாடி இது வரை கோப்பையை அடித்தததில்லை, இதற்கு முன்னர் 2011, 2012, 2014,2023 ஆகிய சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் போட்டிகளில் விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றதில்லை, மும்பை அணி கோப்பையை வென்ற 2013,2015, 2017, 2019,2020 ஆகிய ஆண்டுகளில் குவாலிபையர் 1 ல் விளையாடி தான் கோப்பையை வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள போட்டிக்கான மும்பை அணி:
ரோகித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பெவோன் ஜேக்கப்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஹர்திக் பாண்டியா, மிட்செல் சான்ட்னர், நமன் திர், ராஜ் அங்கத் பாவா, சரித் அசலங்கா, ராபின் மின்ஸ், ஸ்ரீஜித், பூல்ட் கிருஷ்ணன், தீபாப்லே கிருஷ்ணன், டி. லிசாட் வில்லியம்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், அஸ்வனி குமார், கர்ண் சர்மா, சத்யநாராயண ராஜு, ரிச்சர்ட் க்ளீசன்.



















