”வயசாகிருச்சு போல... இப்போ தான் தெரியுது” தோனியின் கலகலப்பு பதில்
13 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்சி தோனியின் காலில் விழுந்த போது என்ன நீனைத்தீர்கள் என்று ஹர்ஷா போக்லே கேட்ட போது தோனி சிரித்துகொண்டே எனக்கு வயதாகிவிட்டதை போல் உணர்ந்தேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்,எஸ் தோனியிடம் அவரது வயது நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
மறக்கக்ச்கூடிய சீசன்:
ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 18வது ஐபிஎல் சீசன் மறக்க வேண்டிய சீசனாக அமைந்தது, 14 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தில் சீசனை முடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஆறுதல் வெற்றி:
நேற்று டேபிள் டாப்பரான குஜராத் டைடன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது, இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது, சிஎஸ்கேவுக்கு ஆயுஷ் மாத்ரே மற்றும் கான்வே நல்ல தொடக்கம் தந்தனர், மாத்ரே 34 ரன்களுக்கு வெளியே அடுத்த வந்த உர்வில் பட்டேல்ட், டெவால்ட் பிரவிஸ், துபே ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணியில் அதிகப்பட்சமாக பிரவிஸ் 57 ரன்களும், கான்வே அணி 52 ரன்கள் எடுத்தனர்.
231 என்கிற கடினமாக இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.
தோனி பேச்சு:
நேற்றைய போட்டிக்கு பிறகு தோனி ஓய்வுப்பெற போவதாக தகவல்கள் வெளியானது, இதனால் போட்டிக்கு பிறகு அவர் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். போட்டிக்கு பிறகு பேசிய தோனி “ஓய்வு குறித்து பேச எனக்கு இன்னும் 4-5 மாதங்கள் வரை நேரம் இருப்பதால் அவசரப்பட வேண்டிய தேவை இல்லை, தற்போது நான் ராஞ்சிக்கு சென்று கொஞ்சம் ஓய்வெடுக்கலாம், பைக் ஓட்டலாம் என்றார். இதனால் நான் திரும்பி வந்து ஆடுவேன் சொல்ல முடியும் என்றும் ஆடமாட்டேன் என்றும் என்னால் சொல்ல முடியாது. ஓய்வை பற்றி பேச எனக்கு நேரம் உள்ளது என்றார்.
வயசாகிருச்சு போல:
அதன் பிறகு 13 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்சி தோனியின் காலில் விழுந்த போது என்ன நீனைத்தீர்கள் என்று ஹர்ஷா போக்லே கேட்ட போது தோனி சிரித்துகொண்டே எனக்கு வயதாகிவிட்டதை போல் உணர்ந்தேன். எங்கள் ஆந்த்ரே சித்தார்த் பேருந்தில் நான் உட்காரும் இருக்கையின் அருகே அமர்வார் அப்போது அவரிடம் உனக்கு வயது என்ன என்று கேட்டப்போது தான் அவர் என்னை விட 25 வயது இளையவர் அப்போது தான் உணர்ந்தேன் எனக்கு நிஜமாகவே வயதாகி விட்டது போல எனக்கு தோன்றியது என்று சிரித்தப்படி தோனி கூறினார்.





















