மேலும் அறிய

MIvCSK: தடுமாறி மீண்டு வந்த மும்பை அணி... சென்னை வெற்றிப்பெற 156 ரன்கள் இலக்கு!

பொல்லார்ட் இருந்தால், சவாலான ஸ்கோரை மும்பை அணி எட்டும் என எதிர்ப்பார்த்த நிலையில், தீக்‌ஷனா பந்துவீச்சில் 14 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார் அவர்

மும்பையில் நடைபெற்று வரும் 15வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. ஐ.பி.எல். தொடரில் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் என்றால் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் களமிறங்கிய மும்பை அணிக்கு, ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் ஓப்பனிங் இறங்கினர். முதல் ஓவரை முகேஷ் வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே மிட்-ஆனில் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரை அடுத்து, இஷான் கிஷனும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். 2-2 என்ற நிலையில் தடுமாறிய மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் - பிரெவிஸ் ரன் சேர்ப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 

போட்டியின் மூன்றாவது ஓவரின்போது, பிரெவிஸ் கேட்சை ஜடேஜா மிஸ் செய்தார். இது சென்னை அணிக்கு உறுத்தலாக இருக்கும் என்றிருந்த நிலையில், அடுத்த ஓவரிலேயே பிரெவிஸ் மீண்டும் கேட்ச் கொடுத்து வெளியேறி இருக்கிறார். இதனால், பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது.

பேட்டிங் ஆர்டரில் நான்காவதாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நிதானமாக ரன் சேர்த்தார். 32 ரன்கள் எடுத்திருந்தபோது சாண்ட்னர் பந்துவீச்சில் அவுட்டானார். இதனால், இளம் வீரர்கள் திலக் வர்மாவும், ஹிரித்திக் ஷோக்கீனும் ரன் சேர்த்தனர். அரை சதம் கடந்த திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

25 ரன்களுக்கு ஹிரித்திக் வெளியேறியதை அடுத்து பொல்லார்ட் களமிறங்கினார். பொல்லார்ட் இருந்தால், சவாலான ஸ்கோரை மும்பை அணி எட்டும் என எதிர்ப்பார்த்த நிலையில், தீக்‌ஷனா பந்துவீச்சில் 14 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார் அவர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருக்கிறது மும்பை அணி. சென்னை வெற்றிப்பெற 156 ரன்கள் தேவை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், மும்பை அணியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. அதில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget