MI vs KKR, IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு; வான்கடேவில் வானவேடிக்கை காட்டுமா கொல்கத்தா..!
MI vs KKR, IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச முடிவு செய்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சூர்யகுமார்ன் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச முடிவு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மிகவும் பலமான அணிகளான கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதிக் கொள்கின்றன. இரு அணிகளும் ஐபிஎல் தொடரின் தொடக்க சீசனான 2008ம் ஆண்டு முதலே மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை 31 முறை இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 22 போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி வெறும் 9 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஹாட்ரிக் தோல்வி:
மொத்த ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை அணி ஆதிக்கம் செலுத்தினாலும், கடைசி 5 போட்டிகளில் கொல்கத்தா அணி தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. குறிப்பாக கடைசியாக இவ்விரு அணிகளும் விளையாடிய 3 போட்டிகளிலும் கொல்கத்தா அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சீசனில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. அந்த ஒரு வெற்றியும் இந்த தொடரில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறாத டெல்லி அணியை வீழ்த்தியுள்ளது. ஆனால், கொல்கத்தாவைப் பொறுத்தவரையில் இந்த சீசனில் மிகவும் பலமான அணியாக காணப்படுகிறது.