LSG vs RCB LIVE: அரை சதம் அடித்தார் கேப்டன் கேஎல் ராகுல்..
LSG vs RCB, IPL 2022 LIVE Updates: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ராஜஸ்தான் அணியுடன் குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாடும். தோல்வி பெறும் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிடும். ஆகவே இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
We had a memorable first outing against tonight’s opponents. It’s time for an encore tonight. 💪🏻👊🏻
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 25, 2022
You got this boys! 😎🙌🏻#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #LSGvRCB #PlayOffs pic.twitter.com/AXfaB5AqTb
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை ஏற்கெனவே அந்த அணி ஆர்சிபி அணியிடம் லீக் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஆகவே அதற்கு இந்த எலிமினேட்டர் போட்டியில் பழிவாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
LSG vs RCB LIVE: கேஎல் ராகுலின் போராட்டம் வீண்.. 14 ரன்கள் வித்தியாசத்தில் RCB வெற்றி
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
LSG vs RCB LIVE: அரை சதம் அடித்தார் கேப்டன் கேஎல் ராகுல்..
பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் 43 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தி வருகிறார்.




















