Kohli vs Gambhir: எதுக்குய்யா இப்படி சண்டை போட்டீங்க..? கோலி-காம்பீர் பேசிகொண்டது என்ன? வெளியான தகவல்..!
நேற்று முழுவதும் என்னதான்யா பிரச்சனை..? எதுக்குய்யா இப்படி சண்டை போட்டீங்க..? யாராவது தெரிஞ்சா சொல்லுங்கையா என ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக விராட் கோலி மற்றும் காம்பீர் இடையேயான வாக்குவாதம்தான் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார். நேற்று முழுவதும் என்னதான்யா பிரச்சனை..? எதுக்குய்யா இப்படி சண்டை போட்டீங்க..? யாராவது தெரிஞ்சா சொல்லுங்கையா என ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
என்ன நடந்தது..?
லக்னோ அணியை சேர்ந்த நவீன் உல் ஹக் மற்றும் கோலி இடையேயான மோதலானது இரண்டாவது இன்னிங்ஸின் 16வது ஓவரில் இருந்து தொடங்கியது. 17வது ஓவரின் முடியும்போது கோலி பிட்சில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நவீன் இதுகுறித்து நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விராட் கோலி, நவீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அமித் மிஸ்ரா தடுத்தாக கூறப்படுகிறது.
Check this Naveen ul haq sasta attitude.
— 𝐂𝐫𝐢𝐭𝐢𝐜 👑 (@King3678180) May 1, 2023
Virat explaining the situation to KL, and KL immediately asks Naveen to talk with Virat, But Naveen disagree.
Ban this cricketer from IPL. Let him show his attitude in those streets of Afghanistan infront of Talibans.@Rizzvi73 #LSGvsRCB pic.twitter.com/BaY1FXHqcg
போட்டி முடிந்த பிறகு, நவீன் மற்றும் விராட் இருவரும் கைகுலுக்கும்போது மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதன்பிறகு, லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் இருவருக்கும் இடையே சமாதானம் செய்ய நவீனை அழைத்தார். ஆனால், நவீன் கோலியுடன் பேச மறுத்து அங்கிருந்து சென்று விட்டார். அந்த வீடியோவும் இணையத்தில் பரவி வைரலானது.
Why is Kohli sledging Naveen ul Haq? Kohli didn't expect Naveen ul haq to respond like that. Looks like Kohli got scaredpic.twitter.com/uarkpacxRJ
— mvrkguy (@mvrkguy) May 1, 2023
தொடர்ந்து, வாக்குவாதம் குறித்து மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேயர்ஸ் மற்றும் விராட் கோலி பேசிகொண்டு இருந்தனர். அப்போது மேயர்ஸ் கோலியிடம், “ ஏன் தொடர்ச்சியாக எங்கள் அணி வீரர்களிடம் தவறாக நடந்து கொள்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார். அதற்கு விராட் கோலி, “ நவீன்தான் என்னை பார்த்து முறைத்து கொண்டிருந்தார்” என தெரிவித்தார்.
அந்த நேரத்தில் டக் அவுட்டிலிருந்த காம்பீர் விறுவிறுவென வந்து மேயர்ஸிடம் பேசாதே என இழுத்து சென்றார்.
காம்பீர்-விராட் வாக்குவாதம்:
அதன்பிற்கு காம்பீர் மற்றும் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். கடுமையான வாக்குவாதத்தின்போது கோலியும் காம்பீரும் ஒருவருக்கொருவர் கூடிய சரியான வார்த்தைகள் என்ன என்பது குறித்து நேரில் பார்த்தவர் ஒருவர் பிடிஐ க்கு பேட்டியளித்தார்.
கோலி மற்றும் காம்பீர் இடையேயான சூடான உரையாடல் இங்கே:
கௌதம் காம்பீர்: என்ன பிரச்சனை உனக்கு? என்ன சொன்னாய் அவரிடம்?
விராட் கோலி: நான் உங்களிடம் எதுவும் சொல்லாத நிலையில் நீங்கள் ஏன் இடையில் வருகிறீர்கள்.
கௌதம் காம்பீர்: நீங்கள் எங்கள் அணி வீரரை அசிங்கப்படுத்துகிறீர்கள்.. அது எங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்துவது போன்றது..?
விராட் கோலி: அப்படியானால், உங்கள் குடும்பத்தை கவனித்து கொள்ளுங்கள், கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
கௌதம் காம்பீர்: உங்களது குடும்பத்தில் இருந்தே எப்படி இருக்க வேண்டும் என்று கற்று கொள்கிறேன்.
சண்டைக்குப் பிறகு, கம்பீர் மற்றும் கோலி இருவருக்கும் அவர்களின் போட்டி கட்டணத்தில் 100% அபராதம் விதிக்கப்பட்டது.