LSG vs PBKS Match Highlights: லக்னோவை நொருக்கிய பஞ்சாப்; 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி..!
LSG vs PBKS Match Highlights; பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால், பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
LSG vs PBKS: கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தோள்பட்டை காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சாம் கரன் அணையை வழி நடத்தினார். பலமான லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்து வீச முடிவு செய்தார். புட்கள் நிறைந்த ஆடுகளத்தில் மிகவும் நிதானமாக ரன்கள் சேகரித்த லக்னோ அணி பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் மேயர்ஸ் தனது விக்கெட்டை இழக்க, களத்து வந்த தீபல் ஹூடா 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதன் பின்னர் கேப்டன் கே.எல். ராகுலுடன் இருனல் பாண்டியா இணைந்து சிறிது நேரம் நிதான ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் லாக்னோ அணி 100 ரன்களைக் கடந்தது, மேலும், தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம் விளாசி விளையாடினார்.
ரபாடா வீசிய 15வது ஓவரில் க்ருனல் பாண்டியா மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆட்டமிழந்தனர். அதிரடியில் சிக்ஸர்களை விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட பூரான் டக் அவுட் ஆனார். அதன் பின்னர், களத்திற்கு வந்த ஸ்டாய்னஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்படது. ஆனால் அவரும் 15 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பில் கேப்டன் சாம் கரன் மூன்று விக்கெட்டுகளும், ராபாடா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். லக்னோ அணி சார்பில் கேப்டன் கே.எல். ராகுல் 74 ரன்களும் மேயர்ஸ் 29 ரன்களும் சேர்த்து இருந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி பவர்ப்ளேவில் 3 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் நிதானமாக ரன் சேகரிப்பதில் ஈடுபட்டது. குறிப்பாக பஞ்சாப் அணி வீரர்கள் மிகவும் நிதானமாக ஆடி வந்தனர். அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தாலும், பஞ்சாப் அணியின் ஷிகிந்தர் ராசா மட்டும் நிலைத்து ஆடி வந்தார். ராசா க்ருனல் பாண்டியா வீசிய 13வது ஓவரில் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி உள்பட 17 ரன்கள் குவித்தார். 34 பந்தில் அரைசதமும் விளாசினார்.
ஆனால் ராசாவும் ரவி பிஷ்னாய் வீசிய 18வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதி கட்டத்தில் களமிறங்கிய ஷாருக்கான் சிக்ஸர்கள் விளாச போட்டியில் பரப்ரப்பு இன்னும் அதிகரித்தது. இறுதியில் பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால், பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.