LSG vs MI IPL 2023: லக்னோவை முட்டிதள்ளுமா மும்பை..? யாருக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.. இன்று பலப்பரீட்சை!
சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் 2023 தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 479 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு அரைசதங்களும் ஒரு சதமும் அடங்கும்.
![LSG vs MI IPL 2023: லக்னோவை முட்டிதள்ளுமா மும்பை..? யாருக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.. இன்று பலப்பரீட்சை! LSG vs DC IPL 2023 Match 62 Preview Prediction Win Loss Stats Lucknow Super Giants vs Mumbai Indians LSG vs MI IPL 2023: லக்னோவை முட்டிதள்ளுமா மும்பை..? யாருக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.. இன்று பலப்பரீட்சை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/16/7fd62c986960a98d22c2ace1544929d51684209842593109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியன் பிரீமியர் லீல் 2023 சீசனின் 63வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோத இருக்கின்றா. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
இந்த போட்டியானது இரு அணிகளும் மிகவும் முக்கியமான போட்டிகளாக கருதப்படுகிறது. இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்கான ஒரு தேடல் இந்த போட்டி. இந்த போட்டி இரு அணிகளுக்கு மட்டுமல்லாமல், களத்தில் உள்ள வேறு சில அணிகளுக்கும் முக்கியமானதாகவும் உள்ளது.
இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்குநேர் சந்தித்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியே வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் மட்டுமே உள்ளநிலையில், இரு அணிகளில் ஒரு அணி இன்று வெற்றிபெற்று பிளே ஆஃப்களில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தி கொள்ளும்.
LSG vs MI போட்டி விவரங்கள்:
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், போட்டி 63
- இடம்: பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ
- தேதி & நேரம்: செவ்வாய், மே 16, மாலை 7:30 மணி
- டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா
ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் பிட்ச் அறிக்கை:
லக்னோவில் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள பிட்ஸ் ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. இங்கு பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க திணறுவார்கள். 165 முதல் 185 ரன்கள் எடுத்தால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். டாஸ் வென்ற கேப்டன் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்யலாம்.
கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா (கேப்டன்), பிரேராக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், யுத்வீர் சிங் சரக், அவேஷ் கான்
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, விஷ்ணு வினோத், டிம் டேவிட், கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா
இன்றைய போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளராக யார் இருப்பார்கள்?
சூர்யகுமார் யாதவ்:
சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் 2023 தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 479 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு அரைசதங்களும் ஒரு சதமும் அடங்கும். இன்றைய போட்டியிலும் அதிரடியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பியூஷ் சாவ்லா:
அனுபவமுள்ள லெக் ஸ்பின்னர் பியூஸ் சாவ்லா அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறார். இதுவரை 19 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இன்றைய போட்டி கணிப்பு: மும்பை அணி வெற்றிபெறும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)