IPL Cricket: சென்னை - மும்பை ஐபிஎல் போட்டி: சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை: தேதி அறிவிப்பு
சென்னை-மும்பை அணிகள் வரும் மே 6-ஆம் தேதி மோதும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் வரும் 3-ஆம் தேதி சேப்பாக்கத்தில் விற்பனை செய்யப்படும் என சென்னை அணி அறிவித்துள்ளது.
சென்னை - மும்பை அணிகள் வரும் மே 6-ஆம் தேதி மோதும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் வரும் 3-ஆம் தேதி சேப்பாக்கத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் 6-ஆம் தேதி சென்னை- மும்பை அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. ரூ.1500, ரூ.2000, ரூ.2500 டிக்கெட்டுக்கான விற்பனை கவுண்டர்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் குஜராத் 12 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. 10 புள்ளிகளுடன் ராஜஸ்தான் 2ம் இடத்திலும், லக்னோ 3ம் இடத்திலும் சென்னை 4ம் இடத்திலும் உள்ளன. 8 புள்ளிகளுடன் பெங்களூரு 5ம் இடத்திலும், பஞ்சாப் 6ம் இடத்திலும் உள்ளன. 6 புள்ளிகளுடன் கொல்கத்தா 7ம் இடத்திலும், ஹைதராபாத் 8ம் இடத்திலும் மும்பை 9ம் இடத்திலும் இருக்கின்றன. டெல்லி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
முன்னதாக, 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கிய 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி, அணிக்கு மெதுவான தொடக்கம் கொடுத்தாலும் 3-வது ஓவர் முதல் அதிரடியாக விளையாடினர். அதனால், ரன் ரேட்டும் வேகமாக ஏறியது.
ஜடேஜாவின் விக்கெட்டுக்குப்பின் களமிறங்கிய தோனி கடைசி இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு ஃபினிஷிங் டச் கொடுத்தார். தொடக்க வீரர் டெவோன் கான்வே 92 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தது குறிப்பித்தக்கது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது. அதனால், பஞ்சாப் அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் – ஷிகர் தவான் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடியில் கேப்டன் தவான் 28 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 42 ரன்னில் அவுட் ஆனார்.
வழக்கம் போல் ஆட்டம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க ரசிகர்கள் சி.எஸ்.கே… சி.எஸ்.கே… என உற்சாக ஆரவாரம் செய்தனர். கடைசி ஓவரை வீசிய பத்திரனா முதல் 5 பந்தில் 6 ரன்களை விட்டுக்கொடுத்தார். இப்போது பஞ்சாப் வெற்றி பெற கடைசி பந்தில் 3 ரன்கள் தேவையானது. அந்தப் பந்தை லெக் சைடில் வளைத்து அடித்தார் சிக்கந்தர் ராசா. பவுண்டரி உருண்டோடிய பந்தை சென்னை வீரர்கள் தடுத்து இருந்தாலும், பஞ்சாப் அணியினர் 3 ரன்களை ஓடியே எடுத்து விட்டனர். இதனால், சென்னை அணியை பஞ்சாப் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. 9 போட்டிகளில் 4-ல் தோல்வி, 5-ல் வெற்றி கண்டுள்ள சென்னை அணி 10 புள்ளிகளுடன் அதே 4-வது இடத்திலே உள்ளது.