முதல் 2 இடம் யாருக்கு? பல்தான்ஸ்-க்கு விட்டு கொடுக்குமா பட்டிதார் படை.. டாஸ் வென்ற பெங்களூரு
முதல் இரண்டு இடத்தில் ஏதாவது ஒரு இடத்தை பிடிக்க பெங்களூரு அணி தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு இன்றைய போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகிறது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரூ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதல் இரண்டு இடத்தில் ஏதாவது ஒரு இடத்தை பிடிக்க பெங்களூரு அணி தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு இன்றைய போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகிறது.
பல்தான்ஸ்-க்கு விட்டு கொடுக்குமா பட்டிதார் படை?
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 6 அணிகள் வெளியேறிய நிலையில், குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதேநேரம், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் எவை என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதனால், நான்கு அணிகள் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், பரபரப்பான சூழலில் லக்னோவில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களுரூ அணி கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். காயம் காரணமாக இம்பாக்ட் பிளேயராக களமிறங்குகிறார் முழு நேர கேப்டன் பட்டிதார்.
ஹைதராபாத் அணி விவரம்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ், ஹர்சல் படேல், ஜெய்தேவ் உனத்கட், எஷான் மலிங்கா
பெங்களூரு அணி விவரம்: பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், லுங்கி நிகிடி, சுயாஷ் சர்மா
இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 8 வெற்றிகளுடன், 17 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறக்கூடும்.
மறுமுனையில் ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த ஐதராபாத் அணி, 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் லக்னோ அணி குஜராத்திற்கு அதிர்ச்சியை கொடுத்தது போன்று, பெங்களூரு அணிக்கு ஐதராபாத் ஆச்சரியமளிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிக்க: Bus Driver Sudden Death: ஓடிக்கொண்டிருந்த பேருந்து; திடீரென மாரடைப்பால் சரிந்த ஓட்டுநர், அடுத்து நடந்தது என்ன.?




















