IPL 2025 PBKS vs KKR: கொல்கத்தாவிற்கு எட்டுமா பஞ்சாப் வைக்கும் டார்கெட்? பட்டையை கிளப்புவார்களா ஸ்ரேயாஸ் பாய்ஸ்?
IPL 2025 PBKS vs KKR: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் டாஸ் வென்று முதலில் பேட் செய்கிறது.

ஐபிஎல் தொடரில் இன்று சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. போட்டி நடக்கும் முல்லன்பூர் மைதானம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரி என்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று கூறலாம்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள பஞ்சாப்பும், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள கொல்கத்தாவும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் ஏற்றம் பெற வாய்ப்பு உள்ளது.
ப்ளேயிங் லெவன்:
பஞ்சாப் அணியில் பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன், ஸ்ரேயாஸ் ஐயர், நேகல் வதோரா, ஜோஷ் இங்கிலிஷ், ஷஷாங்க் சிங், மேக்ஸ்வெல், ஜான்சென், ஷேவியர், அர்ஷ்தீப் சிங், சாஹல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
கொல்கத்தா அணியில் டி காக், சுனில் நரைன், ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரஸல், ராமன்தீப் சிங், ராணா, வைபவ் அரோரா, நோர்ட்ஜே, வருண் சக்கரவர்த்தி இடம்பிடித்துள்ளனர்.
பேட்டிங், பவுலிங் எப்படி?
முதலில் பேட்டிங் செய்யும் பஞ்சாப் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடி 12 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 22 ரன்களுடன் அவுட்டாகினார். பிரப்சிம்ரன் ஒரு பக்கம் அதிரடி காட்டி வருகிறார். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகினார். நேகல் வதேரா, இங்கிலிஷ், மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங் உள்ளனர். இவர்கள் அதிரடி காட்டினால் பஞ்சாப் பலமான ரன்களை குவிக்கும்.
கொல்கத்தா அணியில் டி காக், சுனில் நரைன், ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரிங்குசிங், ரஸல், ராமன்தீப்சிங் உள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அர்ஷ்தீப்சிங், சாஹல், ஜான்சென் பஞ்சாபிற்கும், கொல்கத்தா அணிக்கு வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா, ராணா ஆகியோர் பலமாக உள்ளனர்.

