பஞ்சாபை பொட்டலம் கட்டுமா பாண்டியா படை? ப்ரீத்தி ஜிந்தாவை பெருமைப்படுத்துவாரா ஸ்ரேயாஸ்?
இன்றைய போட்டியில் வென்று, 2020ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற மும்பை முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், 2014ம் ஆண்டுக்குப் பிறகு ஒருமுறை கூட பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணிக்கு எதிரான குவாலிஃபயர் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதி போட்டியில் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.
பஞ்சாபை பொட்டலம் கட்டுமா பாண்டியா படை?
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மிச்சம் உள்ளன. இறுதி போட்டிக்கு, பெங்களூரு அணி ஏற்கனவே முன்னேறிவிட்டது. அதனை எதிர்த்து விளையாடப்போவது யார் என்பது இன்றைய போட்டியில் தெரிந்துவிடும்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அகமதாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்க உள்ளது.
மும்பை அணி விவரம்: ரோஹித் சர்மா, ஜானி பேர்ஸ்டோவ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், ராஜ் பாவா, டிரென்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ரீஸ் டாப்லி
பஞ்சாப் அணி விவரம்: பிரியன்ஸ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷஷாங்க் சிங், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
ப்ரீத்தி ஜிந்தாவை பெருமைப்படுத்துவாரா ஸ்ரேயாஸ்?
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் அணி, முதல் குவாலிஃபையரில் பெங்களூரு அணியிடம் தோற்றது. அதேநேரம், எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு மும்பை அணி முன்னேறியுள்ளது.
இன்றைய போட்டியில் வென்று, 2020ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற மும்பை முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், 2014ம் ஆண்டுக்குப் பிறகு ஒருமுறை கூட பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இன்றைய போட்டியின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க: Mumbai Indians: "இவங்களுக்கு மட்டும் எப்பவுமே லக் அடிக்குது எப்படி?" மும்பையை சீண்டிய அஸ்வின், ரசிகர்கள் அட்டாக்


















