IPL 2025 CSK vs LSG: ஃபினிஷர் தோனி இஸ் பேக்.. மீண்டும் வெற்றிக் கணக்கைத் தொடங்கிய சிஎஸ்கே!
IPL 2025 CSK vs LSG: 5 போட்டிகளில் அடைந்த தொடர் தோல்விக்கு பிறகு சென்னை அணி இன்று லக்னோவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

IPL 2025 CSK vs LSG:
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி சென்னை பந்துவீச்சில் தடுமாறியது. ரிஷப்பண்ட் அரைசதத்தால் லக்னோ அணி 167 ரன்களை சென்னைக்கு இலக்காக நிர்ணயித்தது.
ரஷீத் அதிரடி தொடக்கம்:
இந்த போட்டியில் அறிமுக வீரர் ரஷீத் - ரவீந்திரா ஜோடி களமிறங்கியது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ரஷீத் பவர்ப்ளேவில் பவுண்டரிகளாக விளாசினார். இதனால், சென்னை ஸ்கோர் ஏறியது. இந்த ஜோடியை ஆவேஷ் கான் பிரித்தார். அவரது பந்தில் 19 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார்.
ஆட்டத்தை மாற்றி சுழல்:
அவர் ஆட்டமிழந்த பிறகு ராகுல் திரிபாதி களமிறங்கினார். ரஷீத்துடன் அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்தைிரா மார்க்ரம் சுழலில் அவுட்டானார். அவர் 22 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்த ஓவரிலே திரிபாதி 9 ரன்னில் அவுட்டானார்.
மார்க்ரம், திக்வேஷ், பிஷ்னோய் சுழல் தாக்குதல் நடத்த ஜடேஜா 7 ரன்னிலும் விஜய் சங்கர் 9 ரன்னிலும் அவுட்டாக, கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனி - ஷிவம் துபே ஜோடி சேர்ந்தனர்.
கடைசி கட்ட திக் திக்:
தோனி ஆவேஷ் கான் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். இதனால், கடைசி 24 பந்துகளில் 44 ரன்கள் தேவைப்பட்டது. தோனி தனது பாணியில் ஆடத்தொடங்கினார். ஷர்துல் தாக்கூர் பதற்றத்தில் 19வது ஓவரில் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கும், 2வது பந்தை சிக்ஸருக்கும் ஷிவம் துபே விளாசினார். அந்த ஓவரில் கடைசி பந்தையும் தோனி பவுண்டரிக்கு விளாச கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு வெறும் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
சென்னை அணி கடைசியில் 3 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. தோனி கடைசி வரை அவுட்டாகாமல் 11 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்களுடனும், ஷிவம் துபே 43 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஷர்துல் தாக்கூர் 4 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங்கினார்.

