IPL 2024: ஷிகர் தவானிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்படுமா..? இதோ முழு உண்மை நிலவரம்..!
பஞ்சாப் கிங்ஸ் சமீபத்தில் ஐபிஎல் 2024ல் ஜிதேஷ் சர்மா அணியின் துணை கேப்டனாக இருப்பார் என்று அறிவித்தது.
சமீபத்தில், இந்திய பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டது. இந்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத வேளையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவானுக்கு பதிலாக அந்த அணியின் துணை கேப்டன் ஜிதேஷ் சர்மா இருந்தார். அதேபோல், மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் பதவியில் இருந்து விலகி, ருதுராஷ் கெய்க்வாடிடம் கேப்டன் பதவியை ஒப்படைந்திருந்தார். இதையடுத்து, அந்த புகைப்படத்தில் எம்.எஸ்.தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றிருந்தார்.
𝐈𝐭'𝐬 𝐒𝐡𝐨𝐰𝐓𝐢𝐦𝐞!
— IndianPremierLeague (@IPL) March 21, 2024
The #TATAIPL is here and WE are ready to ROCK & ROLL 🎉🥳🥁
Presenting the 9 captains with PBKS being represented by vice-captain Jitesh Sharma. pic.twitter.com/v3fyo95cWI
கேப்டன் பதவியிலிருந்து தூக்கப்பட்டரா ஷிகர் தவான்..?
பஞ்சாப் கிங்ஸ் சமீபத்தில் ஐபிஎல் 2024ல் ஜிதேஷ் சர்மா அணியின் துணை கேப்டனாக இருப்பார் என்று அறிவித்தது. ஆனால், போட்டோஷூட்டின்போது ஷிகர் தவான் இல்லாததற்கான காரணத்தை அணி நிர்வாகம் விளக்கவில்லை. தற்போது ஊடகங்களில் வெளியான தகவலின்படி, ஷிகர் தவான் மற்ற கேப்டன்களுடன் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், தவானுக்கு கடந்த இரண்டு நாள்களாக உடல்நிலை சரியில்லை. நல்லவேளையாக அவருக்கு பெரியதளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தது.. மார்ச் 23ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான பஞ்சாப் கிங்ஸின் முதல் போட்டிக்கு முன் தவான் முழு உடன் தகுதியுடன் இருப்பார் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் 2024 10 அணிகளின் கேப்டன்கள் விவரம்:
ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்), ரிஷப் பந்த் (டெல்லி கேப்பிடல்ஸ்), சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்), ஷ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), கேஎல் ராகுல் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்), ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்), ஷிகர் தவான் (பஞ்சாப் கிங்ஸ்), சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ் ), ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), பாட் கம்மின்ஸ் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்).
அணி வாரியாக ஐபிஎல் 2024 முதல் கட்ட அட்டவணை:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
1. மார்ச் 22 - CSK vs RCB - சென்னை
2. மார்ச் 26 - CSK vs GT - சென்னை
3. மார்ச் 31 - DC vs CSK -விசாகப்பட்டினம்
4. ஏப்ரல் 5 - SRH vs CSK - ஹைதராபாத்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
1. மார்ச் 22 - CSK vs RCB - சென்னை
2. மார்ச் 25 - RCB vs PBKS - பெங்களூரு
3. மார்ச் 29 - RCB vs KKR - பெங்களூரு
4. ஏப்ரல் 2 - RCB vs LSG - பெங்களூரு
5. ஏப்ரல் 6 - RR vs RCB - ஜெய்ப்பூர்
குஜராத் டைட்டன்ஸ்:
1. மார்ச் 24 - GT vs MI - அகமதாபாத்
2. மார்ச் 26 - CSK vs GT - சென்னை
3. மார்ச் 31 - GT vs SRH - அகமதாபாத்
4. ஏப்ரல் 4 - GT vs PBKS - அகமதாபாத்
5. ஏப்ரல் 7 - LSG vs GT - லக்னோ
மும்பை இந்தியன்ஸ்:
1. மார்ச் 24 - GT vs MI - அகமதாபாத்
2. மார்ச் 27 - SRG vs MI - ஹைதராபாத்
3. ஏப்ரல் 1 - MI vs RR - மும்பை
4. ஏப்ரல் 7 - MI vs DC - மும்பை
டெல்லி கேப்பிடல்ஸ்:
1. மார்ச் 23 - PBKS vs DC - மொஹாலி
2. மார்ச் 28 - RR vs DC - ஜெய்ப்பூர்
3. மார்ச் 31 - DC vs CSK - விசாகப்பட்டினம்
4. ஏப்ரல் 3 - DC vs KKR - விசாகப்பட்டினம்
5. ஏப்ரல் 7 - MI vs DC - மும்பை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
1. மார்ச் 23 - KKR vs SRH - கொல்கத்தா
2. மார்ச் 29 - RCB vs KKR - பெங்களூரு
3. ஏப்ரல் 3 - DC vs KKR - விசாகப்பட்டினம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
1. மார்ச் 24 - RR vs LSG - ஜெய்ப்பூர்
2. மார்ச் 30 - LSG vs PBKS - லக்னோ
3. ஏப்ரல் 2 - RCB vs LSG - பெங்களூரு
4. ஏப்ரல் 7 - LSG vs GT - லக்னோ
பஞ்சாப் கிங்ஸ்:
1. மார்ச் 23 - PBKS vs DC - மொஹாலி
2. மார்ச் 25 - RCB vs PBKS - பெங்களூரு
3. மார்ச் 30 - LSG vs PBKS - லக்னோ
4. ஏப்ரல் 4 - GT vs PBKS - அகமதாபாத்
ராஜஸ்தான் ராயல்ஸ்:
1. மார்ச் 24 - RR vs LSG - ஜெய்ப்பூர்
2. மார்ச் 28 - RR vs DC - ஜெய்ப்பூர்
3. ஏப்ரல் 1 - MI vs RR - மும்பை
4. ஏப்ரல் 6 - RR vs RCB - ஜெய்ப்பூர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
1. மார்ச் 23 - KKR vs SRH - கொல்கத்தா
2. மார்ச் 27 - SRH vs MI - ஹைதராபாத்
3. மார்ச் 31 - GT vs SRH - அகமதாபாத்
4. ஏப்ரல் 5 - SRH vs CSK - ஹைதராபாத்