IPL 2024 Points Table: புள்ளிப்பட்டியலில் முன்னேறிய மும்பை அணி.. பரிதாபத்தில் பஞ்சாப்.. மற்ற அணிகளின் நிலவரம் இதோ!
IPL 2024 Updated Points Table: பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் மும்பை அணி 6 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.

ஐபிஎல் 2024ன் 33வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. முல்லன்பூரில் நடந்த போட்டியில் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 6 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
அதேநேரத்தில் பஞ்சாப் அணி 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு புள்ளிகள் அட்டவணையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகள் மற்றும் -0.133 என்ற ரன் ரேட்டுடன் 7வது இடத்திற்கு வந்துள்ளது. போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் -0.251 என்ற நிகர ரன் ரேட்டுடன் 9வது இடத்தில் உள்ளது.
முதல் 4 இடங்களில் யார் யார்..?
அட்டவணையில் முதல் அணிகளின் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் இதுவரை 7 போட்டிகளில் 6ல் வெற்றிபெற்று 12 புள்ளிகளை பெற்றுள்ளது. பின்னர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. கொல்கத்தா நிகர ரன் ரேட் +1.399, சென்னை +0.726 மற்றும் ஹைதராபாத் +0.502 ஆக உள்ளது.
மற்ற அணிகளின் நிலவரங்கள் என்ன..?
இதன் தொடர்ச்சியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் தலா 6 புள்ளிகளுடன் முறையே ஐந்து, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் உள்ளன. லக்னோ நிகர ரன் ரேட் +0.038, டெல்லி -0.074 மற்றும் மும்பை இந்தியன்ஸ் -0.133. இதற்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ் 4 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -0.251 உடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடைசி இடத்தில் அதாவது 10வது இடத்தில் உள்ளது. பெங்களூரு இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 1ல் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் வலம் வருகிறது.
அட்டவணை வாரியாக புள்ளிப்பட்டியல் இதோ!
| தரவரிசை | அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | டை | புள்ளிகள் | ரன் ரேட் |
| 1 | ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) | 7 | 6 | 1 | 0 | 12 | 0.677 |
| 2 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) | 6 | 4 | 2 | 0 | 8 | 1.399 |
| 3 | சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) | 6 | 4 | 2 | 0 | 8 | 0.726 |
| 4 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) | 6 | 4 | 2 | 0 | 8 | 0.502 |
| 5 | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) | 6 | 3 | 3 | 0 | 6 | 0.038 |
| 6 | டெல்லி கேப்பிடல்ஸ் (DC) | 7 | 3 | 4 | 0 | 6 | -0.074 |
| 7 | மும்பை இந்தியன்ஸ் (MI) | 7 | 3 | 4 | 0 | 6 | -0.133 |
| 8 | குஜராத் டைட்டன்ஸ் (GT) | 7 | 3 | 4 | 0 | 6 | -1.303 |
| 9 | பஞ்சாப் கிங்ஸ் (PBKS) | 7 | 2 | 5 | 0 | 4 | -0.251 |
| 10 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) | 7 | 1 | 6 | 0 | 2 | -1.185 |
ஆரஞ்சு கேப்:
1. விராட் கோலி (ஆர்சிபி) - 7 போட்டிகள், 361 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 113*, சராசரி: 72.2, ஸ்ட்ரைக் ரேட்: 147.34, 1 சதம், 2 அரைசதம், 35 பவுண்டரிகள், 14 சிக்சர்கள்.
2. ரியான் பராக் (ஆர்ஆர்) - 7 போட்டிகள், 318 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 84*, சராசரி: 63.6, ஸ்ட்ரைக் ரேட்: 161.42, 3 அரைசதம், 22 பவுண்டரிகள், 20 சிக்ஸர்கள்.
3. ரோஹித் சர்மா (எம்ஐ) - 7 போட்டிகள், 297 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 105*, சராசரி: 49.5, ஸ்ட்ரைக் ரேட்: 164.08, 1 சதம், 1 அரைசதம், 30 பவுண்டரிகள், 18 சிக்சர்கள்.
4. சுனில் நரைன் (கேகேஆர்) - 6 போட்டிகள், 276 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 109, சராசரி: 46, ஸ்ட்ரைக் ரேட்: 187.75, 1 சதம், 1 அரைசதம், 26 பவுண்டரிகள், 20 சிக்சர்கள்.
5. சஞ்சு சாம்சன் (ஆர்ஆர்) - 7 போட்டிகள், 276 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 82*, சராசரி: 55.2, ஸ்ட்ரைக் ரேட்: 155.05, 3 அரைசதம், 27 பவுண்டரிகள், 11 சிக்சர்கள்.
பர்பிள் கேப்:
1. ஜஸ்பிரித் பும்ரா (எம்ஐ) - 7 போட்டிகள், 13 விக்கெட்டுகள், BBI: 5/21, சராசரி: 12.84, Econ: 5.96, SR: 12.92, 1 ஐந்து விக்கெட்டுகள்.
2. யுஸ்வேந்திர சாஹல் (ஆர்ஆர்) - 7 போட்டிகள், 12 விக்கெட்டுகள், BBI: 3/11, சராசரி: 18.08, Econ: 8.34, SR: 13, 0 ஐந்து விக்கெட்டுகள்.
3. ஜெரால்ட் கோட்ஸி (எம்ஐ) - 7 போட்டிகள், 12 விக்கெட்டுகள், BBI: 4/34, சராசரி: 21.91, Econ: 9.92, SR: 13.25, 1 ஐந்து விக்கெட்டுகள்.
4. முஸ்தாபிசுர் ரஹ்மான் (சிஎஸ்கே) - 5 போட்டிகள், 10 விக்கெட்டுகள், BBI: 4/29, சராசரி: 18.3, Econ: 9.15, SR: 12, 1 ஐந்து விக்கெட்டுகள்.
5. சாம் கர்ரன் (பிபிகேஎஸ்) - 7 போட்டிகள், 10 விக்கெட்டுகள், பிபிஐ: 3/28, சராசரி: 19.3, எகான்: 8.77, எஸ்ஆர்: 13.2, 0 ஐந்து விக்கெட்டுகள்.




















