IPL 2024: ஐ.பி.எல் 2024...அட்டவணை வெளியானது...முதல் போட்டியில் மோதும் அணி எது தெரியுமா?
ஐ.பி.எல் 17 வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல் சீசன் 17:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது.
IPL 2024 schedule for the first 21 matches. #IPLOnStar. pic.twitter.com/hNlgoSzae7
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 22, 2024
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் 17- வது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்று (பிப்ரவரி 22) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த சீசன் தொடங்குகிறது. அதன்படி, முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை தான் தற்போது வெளியாகியுள்ளது.
IPL 2024 SCHEDULE...!!!! #IPLonStar pic.twitter.com/QwWDkuhOko
— Johns. (@CricCrazyJohns) February 22, 2024
அந்த வகையில் முதல் 21 போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மார்ச் 24 ஆம் தேதி மோதுகின்றன. இந்நிலையில் சென்னையில் முதல் போட்டி தொடங்குவதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2009, 2011, 2012, 2018, 2019, 2020, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் முதல் போட்டியில் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.