மேலும் அறிய

IPL 2024: யார் கைகள் ஓங்கும்? பெங்களூரில் யார் ஆட்சி? இன்று கொல்கத்தாவுடன் மோதும் பெங்களூரு.. முழு விவரம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஃபாப் டுபிளெசிஸும் தலைமை தாங்குகின்றனர்.

ஐபிஎல் 2024ன் 10வது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு நேருக்குநேர் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஃபாப் டுபிளெசிஸும் தலைமை தாங்குகின்றனர். ஐபிஎல் 2024ல் பெங்களூரு அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடி வெற்றிபெற்றுள்ளது. 

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே இதுவரை 32 போட்டிகளில் நடந்துள்ளன. இதில், கொல்கத்தா அணி 18 போட்டிகளிலும், பெங்களூரு அணி 14 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல், பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இரு அணிகளும் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 7 போட்டிகளில் கொல்கத்தா அணியும், 4 போட்டிகளில் பெங்களூரு அணியும் வெற்றிபெற்றுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே அதிக அளவிலான ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. 

கடந்த 5 போட்டிகளில்..

  • 2023 - கொல்கத்தா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
  • 2023 - கொல்கத்தா  81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
  • 2022 - பெங்களூரு 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
  • 2021- கொல்கத்தா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
  • 2021- கொல்கத்தா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிட்ச் ரிப்போர்ட்:

பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தின், பிட்சானது பொதுவாக தட்டையாக இருப்பதால் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு உதவிகரமாகவும் இருக்கும். அதே சமயம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ப அவ்வபோது பிட்ச் மாறும். இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்கள் இருப்பதால், அதிக ஸ்கோரை எதிர்பார்க்கலாம். ஆட்டத்தில் சேஸ் செய்யும்போது விறுவிறுப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 

விராட் கோலி, ஃபாஃப் டுபிளெசிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ரஜத் படிடாப், கிளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், அல்ஜாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ராமன்தீப் சிங், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா.

 முழு அணி விவரம்:

ஆர்சிபி - ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுய்யாஷ் பிரபுதேசாய், வில் ஜாக், மஹிபால் லோம்ரோர், கர்ண் சர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டகர், விஜய்குமார் விஷக், ஆகாஷ் தீப். , முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு ஷர்மா, ராஜன் குமார், கேமரூன் கிரீன், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் குர்ரன், லாக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், சவுரவ் சவுகான்.

கேகேஆர் - ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், பில் சால்ட், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, கே.எஸ். சகாரியா, மிட்செல் ஸ்டார்க், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், மனிஷ் பாண்டே, முஜீப் உர் ரஹ்மான், துஷ்மந்த சமீரா, சாகிப் ஹுசைன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget