LSG vs KKR LIVE Score: ஆல் அவுட் ஆன லக்னோ; 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா!
IPL 2024, LSG vs KKR LIVE Score: லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் லைவ் ஸ்கோரை இங்கே காணலாம்.
LIVE
Background
ஐபிஎல் சீசன் 17:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 53 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது லக்னோ அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. தொடக்க விரர் டி-காக் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறுவது லக்னோ அணியின் பலவீனமாக உள்ளது. கே,எல். ராகுல், ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். மோஷின் கான், யாஷ் தாக்கூர் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். கொல்கத்தா அணியில் சால்ட், நரைன், ஸ்ரேயாஸ் அய்யர், ரசல் மற்றும் ரிங்கு சிங் என, அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். மிட்செல் ஸ்டார்ட் ஃபார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஹர்ஷித் ராணா மற்றும் நரைன் ஆகியோரும் பந்துவீச்சில் அசத்தி வருகின்றனர்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் லக்னோ அணி 3 முறையும், கொல்கத்தா அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 210 ரன்களையும், குறைந்தபட்சமாக 161 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 208 ரன்களையும், குறைந்தபட்சமாக 101 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
டாஸ் வென்ற லக்னோ:
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்)
பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர் ), சுனில் நரேன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் அய்யர்(கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்)
கே.எல். ராகுல்(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் ), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆஷ்டன் டர்னர், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்
LSG vs KKR LIVE Score: ஆல் அவுட் ஆன லக்னோ; 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா!
லக்னோ அணி 16.1ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
LSG vs KKR LIVE Score: டர்னர் அவுட்!
ஆட்டத்தின் 14வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட டர்னர் தனது விக்கெட்டினை கடைசி பந்தில் இழந்து வெளியேறினார்.
LSG vs KKR LIVE Score: 13 ஓவர்கள் முடிந்தது!
13 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்துள்ளது.
LSG vs KKR LIVE Score: பதோனி அவுட்!
லக்னோ அணியின் பேட்ஸ்மேன் ஆயூஷ் பதோனி ஆட்டத்தின் 13வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 12 பந்தில் 15 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
LSG vs KKR LIVE Score: நிக்கோலஸ் பூரன்!
நிக்கோலஸ் பூரன் தனது விக்கெட்டினை ரஸல் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 8 பந்தில் 10 ரன்கள் சேர்த்திருந்தார்.