மேலும் அறிய

KKR vs RR LIVE Score: வீணாய் போன நரைன் சதம்; சேஸிங்கில் சதம் விளாசி ராஜஸ்தானுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த பட்லர்!

IPL 2024 KKR vs RR LIVE Score Updates: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபிநாடு தளத்தில் காணலாம்.

LIVE

Key Events
KKR vs RR LIVE Score: வீணாய் போன நரைன் சதம்; சேஸிங்கில் சதம் விளாசி ராஜஸ்தானுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த பட்லர்!

Background

இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 31வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த சீசனில் இரு அணிகளும் தற்போது அற்புதமான பார்மில் உள்ளன. புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதலிடத்தில் உள்ளன. இந்தநிலையில், ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்றைய போட்டியும் அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, கேகேஆர் 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து ஆர்ஆர் 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த சீசனில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 28 முறை மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக கொல்கத்தா 14 வெற்றிகளுடனும், ராஜஸ்தான் 13 வெற்றிகளுடனும் உள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. 

கொல்கத்தாவில் இரு அணிகளும் மோதியதில்...

விளையாடிய போட்டிகள்: 10
ராஜஸ்தான் ராயல்ஸ்: 3
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 6
 
பிட்ச் ரிப்போர்ட்: 
 
இன்றைய போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாகவே உள்ளது. எனவே, இன்றைய போட்டியிலும் அதிக ரன் எண்ணிக்கையை இரு அணிகளும் பதிவு செய்யலாம். இரண்டாவது இன்னிங்ஸின்போது பிட்ச் சுழலுக்கு ஏற்றவாறு மாறும். எனவே, இரண்டாம் பாதியில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம்.
 
இன்றைய வானிலை எப்படி..? 

கொல்கத்தாவில் இன்று வானத்தில் பெரியளவில் மேகங்கள் இருக்காது. இருப்பினும், வெப்பநிலை 32 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். accuweather.com படி, ஈரப்பதம் இரவு 7 மணிக்கு 68 சதவீதத்தில் இருந்து இரவு 11 மணிக்கு 88 சதவீதமாக அதிகரிக்கும்.

யார் அதிக ஆதிக்கம்..?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சஞ்சு சாம்சன் 388 ரன்களுடனும், அஜிங்க்யா ரஹானே 338 ரன்களுடனும் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் சிவம் மாவி அதிகபட்சமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சுனில் நரைன் 12 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 

சுனில் நரைன், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ராமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஆண்ட்ரே ரசல், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), அவேஷ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல், கேசவ் மகாராஜ், டிரெண்ட் போல்ட்

23:53 PM (IST)  •  16 Apr 2024

KKR vs RR LIVE Score: பட்லர் 7வது சதம்!

பட்லர் தனது 7வது ஐபிஎல் சதத்தினை 101வது ஐபிஎல் போட்டியில் பூர்த்தி செய்துள்ளார். நடப்பு தொடரில் இரண்டாவது சதத்தையும் எட்டியுள்ளார் பட்லர். 

23:51 PM (IST)  •  16 Apr 2024

KKR vs RR LIVE Score: வீணாய் போன நரைன் சதம்; சேஸிங்கில் சதம் விளாசி ராஜஸ்தானுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த பட்லர்!

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய பட்லர், அடுத்த மூன்று பந்துகளில் ரன் எதுவும் எடுக்கததால் ஆட்டத்தில் பரபரப்பு கூடியது, ஆனால் 5வது பந்தில் இரண்டு ரன்களும் கடைசி பந்தில் ஒரு ரன்னும் எடுத்து அணியை வெற்றி பெறவைத்தார். 

23:33 PM (IST)  •  16 Apr 2024

KKR vs RR LIVE Score: பரபரப்பின் உச்சகட்டம்; வெற்றி யாருக்கு?

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 9 ரன்கள் வெற்றிக்கு தேவைப்படுகின்றது. பட்லர் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

23:29 PM (IST)  •  16 Apr 2024

KKR vs RR LIVE Score: 200 ரன்களை எட்டிய ராஜஸ்தான்!

ராஜஸ்தான் அணி 18.1 ஓவரில் 200 ரன்களை எட்டியுள்ளது. 

23:28 PM (IST)  •  16 Apr 2024

KKR vs RR LIVE Score: 28 ரன்கள் தேவை!

ராஜஸ்தான் அணி வெற்றி பெற 2 ஓவரில் 28 ரன்கள் தேவைப்படுகின்றது. 18வது ஓவரில் ராஜஸ்தான் அணி 18 ரன்கள் சேர்த்தது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: சென்னையில் தொடங்கியது தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம்
Breaking News LIVE: சென்னையில் தொடங்கியது தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம்
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
Embed widget