CSK vs RCB LIVE Score, IPL 2024: வெற்றியோடு தொடங்கிய சென்னை; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி அசத்தல்
CSK vs RCB LIVE Score, IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளையும் சுவாரஸ்யமான தகவல்களையும் ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

Background
இந்தியன் பிரிமியர் லீக்கின் 17வது சீசன் இன்று முதல் தொடங்குகின்றது. முதல் போட்டியில் ஐந்து முறை கோப்பையை வென்று நடப்புச் சாம்பியனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
17வது சீசனின் முதல் போட்டி இது என்பதால் தொடக்க விழாவுடன் இந்த சீசன் மிகவும் கோலாகளமாக தொடங்கவுள்ளது. குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி தொடக்க விழாவில் இடம் பெற்றுள்ளது. நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர் பட்டாளம் கோடிக்கணக்கில் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டனாக இருந்த தோனிதான். வயது மூப்பு காரணமாக தோனி இந்த சீசனுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில், தோனியிடம் இருந்த கேப்டன் பொறுப்பு சென்னை அணியின் இளம் தொடக்க வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் வசம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தோனி ரசிகர்களுக்கு வருத்தத்தினைக் கொடுத்தாலும், தோனி ரசிகர்கள் அனைவரும் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மட்டும் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது. சென்னையும் பெங்களூரும் சேப்பாக்கத்தில் 8 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளது. இதில் சென்னை 7 போட்டிகளிலும், பெங்களூரு 1 போட்டியிலும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் சென்னை அணியின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்துள்ளது.
சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி இந்த சீசனில் ஒரு வீரராக களமிறங்குகின்றார் என்பதால் தோனி விக்கெட் கீப்பிங் செய்வாரா அல்லது இம்பேக்ட் ப்ளேயர் விதியைப் பயன்படுத்தி பேட்டிங் மட்டும் செய்வாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகள் வைத்துள்ள ரசிகர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி ரசிகர்கள் இலவசமாக போட்டி நடைபெறும் தினத்தில் பேருந்துகளில் பயணம் செய்துகொள்ளலாம்.
17வது ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியைப் பெற இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம். இந்த மைதானத்தில் சேஸ் செய்வது சிரமம் என்பதால் இரு அணிகளும் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யத்தான் முடிவு செய்யும் என எதிர்பார்க்கலாம்.
CSK vs RCB LIVE Score, IPL 2024: வெற்றியோடு தொடங்கிய சென்னை; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி அசத்தல்
சென்னை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
CSK vs RCB LIVE Score, IPL 2024: 150 ரன்களை எட்டிய சென்னை!
சென்னை அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டினை இழந்து 150 ரன்களை எட்டியுள்ளது.




















