IPL 2023, SRH vs LSG Playing XI: ஹைதராபாத்க்கு நெருக்கடி கொடுக்குமா லக்னோ? இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் இதோ..!
IPL 2023, SRH vs LSG Playing XI: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் களமிறங்கும் வீரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
IPL 2023, SRH vs LSG: ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் சீசன்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது. ஆனாலும், இதுவரை ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. குஜராத் மற்றும் சென்னை அணிகள் மட்டுமே ஓரளவிற்கு வலுவாக முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக டெல்லியை தவிர மற்ற 7 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.
லக்னோ - ஐதராபாத் மோதல்:
குர்னல் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியுள்ளது. இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் இரு அணிகளின் வெற்றி தோல்விகள் குறித்து இங்கு காணலாம்.
லக்னோ அணி நிலவரம்:
நடப்பு தொடரை அதிரடியாக தொடங்கினாலும், கடந்த சில போட்டிகளாக லக்னோ அணி பெரிதாக சோபிக்கவில்லை.கேப்டன் கே.எல். ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகியது அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய கடைசி லீக் போட்டியில், 227 ரன்களை வாரிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே புள்ளிப்பட்டியலில் டாப்-4க்குள் நுழைந்து, பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைதொடர முடியும்.
ஐதராபாத் அணி நிலவரம்:
ஐதராபாத் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி நான்கில் மட்டும் வெற்றி கண்டு, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றால் தான், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஓரளவிற்கு வாய்ப்பு உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே அந்த அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், கடைசி போட்டியில் வலுவான ராஜஸ்தான் அணியை ஐதராபாத் வீழ்த்தியுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியின் ப்ளேயிங் லெவன்
குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா(கேப்டன்), பிரேராக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், யுத்வீர் சிங் சரக், அவேஷ் கான்
லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
ஸ்வப்னில் சிங், டேனியல் சாம்ஸ், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, அர்பித் குலேரியா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவன்
அபிஷேக் சர்மா, அன்மோல்பிரீத் சிங், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், டி நடராஜன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹக் ஃபரூக்கி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
விவ்ராந்த் சர்மா, சன்வீர் சிங், மயங்க் டாகர், நிதிஷ் குமார் ரெட்டி, மார்கோ ஜான்சன்.