IPL 2023 Sanju Samson: ராஜஸ்தான் தோல்வி...! சந்தீப்சர்மா இல்லயாம்.. சஞ்சு சாம்சன்தான் காரணமாம்..! என்ன சொல்றீங்க?
IPL 2023 Sanju Samson: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
IPL 2023 Sanju Samson: ஐ.பி.எல். போட்டித் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கியது முதல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் 75 சதவீதத்துக்கும் மேலான போட்டிகள் முடிந்து விட்டது. இம்முறை இதற்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கூட இதுபோன்றதொரு நிலை இல்லை எனும் கூறும் அளவிற்கு உள்ளது. அதாவது களத்தில் உள்ள 10 அணிகளும் ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லவதற்கான வாய்ப்புகளுடன் உள்ளது.
கடைசி பந்தில் ட்விஸ்ட்:
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியின் முடிவு இறுதி கட்டத்தில் மாறியது. அதாவது கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணி இருந்தது. பந்தை வீசிய சந்தீப் சர்மா நோ- பாலாக வீச போட்டியில் உச்சகட்ட பரபப்பு ஏற்பட்டது.
இறுதிப்பந்தை திரும்பவும் வீச அந்த பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார். இந்த போட்டியில் ராஜஸ்தன் அணியின் தோல்விக்கு சந்தீப் சர்மாவை அனைவரும் காரணம் காட்டி வருகிறார்கள். ஆனால் இந்த போட்டியில் ராஜஸ்தானின் வெற்றி கைவிட்டுப் போக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் ஒரு காரணம் தான்.
— Washington Ydav (@WashingtonYdav) May 7, 2023
சஞ்சு சாம்சன் காரணமா?
ஆமாம், போட்டியின் 12வது ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மாவை ரன் அவுட் செய்வதற்கு கிடைத்த வாய்ப்பை ராஜஸ்தான் அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சன் வீணடித்ததும் ஒரு காரணம் தான். அப்போது 26 பந்தில் 40 ரன்களில் இருந்த அபிஷேக் சர்மா அதன் பின்னர் 34 பந்தில் 55 ரன்கள் எடுத்த பின்னர் தான் தனது விக்கெட்டை இழந்தார். இந்த ரன் அவுட் வாய்ப்பை மட்டும் சஞ்சு சாம்சன் சரியாக பயன்படுத்தி இருந்தால் போட்டியின் முடிவு ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக முடிந்திருக்கும் என பலரும் கூறிவருகின்றனர். தொடக்க வீரரான அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 34 பந்துகளில் 55 ரன்களை விளாசி, ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஐதராபாத் த்ரில் வெற்றி
கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது, சந்தீப் சர்மா பந்துவீச்சில் சமத் கேட்ச் அவுட்டானார். அது நோபால் ஆனதால் மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில், ஐதராபாத் வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து வீசப்பட்ட ப்ரீ-ஹிட் பந்தில் சமாத் கிக்ஸர் விளாசி ஐதராபாத்திற்கு திரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.