DC vs KKR: நீண்ட நாட்களுக்கு பின் இஷாந்த்.. கொல்கத்தாவில் லிட்டன், ராய்.. பல மாற்றங்களை கண்ட DC - KKR போட்டி!
நீண்ட நாட்களுக்கு பிறகு இஷாந்த் சர்மா டெல்லி அணிக்காக களமிறங்கியுள்ளார். அதேபோல், கொல்கத்தா அணியில் லிட்டன் தாஸ் மற்றும் ஜேசன் ராய் களமிறங்கியுள்ளனர்.
ஐபிஎல் 2023 இன் 28வது லீக் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மழை காரணமாக முதலில் டாஸ் தாமதமானது. இந்தப் போட்டியில், விளையாடும் லெவனில் டெல்லி அணி பல மாற்றங்களை செய்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இஷாந்த் சர்மா டெல்லி அணிக்காக களமிறங்கியுள்ளார். அதேபோல், கொல்கத்தா அணியில் லிட்டன் தாஸ் மற்றும் ஜேசன் ராய் களமிறங்கியுள்ளனர்.
இரு அணிகளின் பிளேயிங் 11:
டெல்லி கேபிடல்ஸ் - டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, அக்ஷர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், என்ரிக் நோர்கியா, இஷாந்த் சர்மா மற்றும் முகேஷ் குமார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஜேசன் ராய், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), மந்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், ரின்கு சிங், சுனில் நரைன், குல்வந்த் கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி.