மேலும் அறிய

Abishek Porel Profile: ரிஷப்பண்ட்டிற்கு பதிலாக களமிறங்கிய அபிஷேக்..! யார் இந்த இளம்பாலகன்...?

ரிஷப்பண்ட்டிற்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அபிஷேக் போரேல் டெல்லி அணிக்காக இன்று களமிறங்கியுள்ளார்.

டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் டெல்லி அணிக்காக இளம் வீரர் அபிஷேக் போரேல் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ளார். டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்பண்ட் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக டெல்லி அணிக்கு கடந்த போட்டியில் சர்ப்ராஸ் கான் விக்கெட்கீப்பராக செயல்பட்டார்.

யார் இந்த அபிஷேக்:

இந்த நிலையில், இந்த போட்டியில் அறிமுக வீரராக அபிஷேக் விக்கெட் கீப்பராக களமிறக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அபிஷேக் கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி பிறந்தவர். 21 வயதே ஆன இவர் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட்கீப்பர் ஆவார். இதுவரை முதல்தர போட்டிகள் 16  போட்டிகளில் ஆடி 6 அரைசதங்களுடன் 695 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் 3 போட்டியில் ஆடி 1 அரைசதத்துடன் 54 ரன்கள் எடுத்துள்ளார். 3 டி20 போட்டிகளில் ஆடி 22 ரன்கள் எடுத்துள்ளார்.  

கடந்த 2022ம் ஆண்டுதான் அபிஷேக் பரோல் முதல்தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். ரிஷப்பண்ட் காயத்தில் சிக்கியதால் அவருக்கு  பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக அபிஷேக் போரேல் டெல்லி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். டெல்லி அணியின் இயக்குனர் சவ்ரவ் கங்குலி, தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகியோர் அபிஷேக் பரோலை தேர்வு செய்துள்ளனர்.

விக்கெட் கீப்பிங் திறன்:

உள்நாட்டு போட்டியில் ஆடிய அபிஷேக் பெரியளவில் ஸ்கோர்களை குவிக்காவிட்டாலும் அவரது விக்கெட் கீப்பிங் திறமை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதன்காரணமாக அவரை டெல்லி அணி ரிஷப்பண்டிற்கு மாற்றாக தேர்வு செய்தது. கடந்த போட்டியில் அபிஷேக் போரேலுக்கு வாய்ப்பு அளிக்கப்படாவிட்டாலும், நடப்பு போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் விக்கெட் கீப்பராக வாய்ப்பு பெற்றுள்ள அபிஷேக் கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தன்னை நிரூபித்தால் நிச்சயம் டெல்லி அணியில் தொடர்ந்து இடம்பெறலாம்.

மேலும் படிக்க:GT vs DC IPL 2023: கட்டம் கட்டும் குஜராத்.. சொந்த மண்ணில் வெற்றியை பறிக்குமா டெல்லி.. ஆடும் லெவன் இதுதான்!

மேலும் படிக்க: GT vs DC IPL 2023 LIVE: குஜராத் vs டெல்லி.. அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் டெல்லி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget