![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CSK vs SRH, IPL 2023: புள்ளிப்பட்டியலில் ஜம்ப் ஆகுமா சென்னை? ஐதாராபாத்தை வீழ்த்த வாய்ப்பு உள்ளதா?
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
![CSK vs SRH, IPL 2023: புள்ளிப்பட்டியலில் ஜம்ப் ஆகுமா சென்னை? ஐதாராபாத்தை வீழ்த்த வாய்ப்பு உள்ளதா? IPL 2023 CSK vs SRH Match Prediction – Who will win today’s IPL match between Chennai Super Kings vs Sunrisers Hyderabad CSK vs SRH, IPL 2023: புள்ளிப்பட்டியலில் ஜம்ப் ஆகுமா சென்னை? ஐதாராபாத்தை வீழ்த்த வாய்ப்பு உள்ளதா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/21/3dfe8bd1cee607cc9f54791d62cc18941682048524775571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.
சென்னை - ஐதராபாத் மோதல்:
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோத உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதனை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஜியோ சினிமா தொலைக்காட்சியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
சென்னை அணி நிலவரம்:
நடப்பு தொடரில் இதுவரை சென்னை அணி 5 போட்டிகளில் விளையாடி, 3 வெற்றிகளுன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி போராடி வென்றது. தோனியின் தலைமையின் கீழ் களமிறங்கும் சென்னை அணியில் கெய்க்வாட், கான்வே, துபே மற்றும் ரகானே ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். ஜடேஜா, மொயின் அலி மற்றும் சாண்ட்னர் ஆகியோர் ஆல்-ரவுண்டர்களக ஜொலிக்க துஷார் பாண்டே மற்றும் பதிரனா வேகப்பந்து வீச்சில் அசத்துகின்றனர். அதேநேரம், இன்றைய போட்டியில் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூரில் நடைபெறும் இன்றைய போட்டி சென்னை அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத் அணி நிலவரம்:
ஐதராபாத் அணி நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மார்க்ரம் தலைமையில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பதிவு செய்த இந்த அணி கடைசியாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், திரிபாதி மற்றும் கிளாசென் ஆகியோர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது ஐதராபாத்தின் பேட்டிங்கை பாதிக்கிறது. அதேநேரம், புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் மயங்க் மார்கண்டே ஆகியோர் ஐதராபாத் அணிக்கு வலுசேர்க்கின்றனர்.
மைதானம் எப்படி?
ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ள ஒரு சில மைதானங்களில், சென்னை சேப்பாக்கம் மைதானமும் ஒன்று. 170 முதல் 180 என்பது வெற்றிபெறுவதற்கான இலக்காக கருதப்படுகிறது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது ஒரு நல்ல முடிவாக இருக்கும்.
சிறந்த பேட்ஸ்மேன்: இன்றைய போட்டியில் சென்னை வீரர் கான்வே சிறந்த வீரராக திகழ வாய்ப்பு
சிறந்த பந்துவீச்சாளர்: இன்றைய போட்டியில் சென்னை வீரர் ஜடேஜா பந்துவீச்சில் அசத்தக் கூடும்
வெற்றி வாய்ப்பு: உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சென்னை அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)