KKR vs DC: கொல்கத்தா அணியில் களமிறங்கும் அடுத்த தமிழக வீரர் பாபா இந்தர்ஜீத்...!-அறிமுக போட்டியில் அசத்துவாரா?
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மும்பை வான்கடேவில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் இந்த தொடரின் தொடக்கத்தில் வலுவாக இருந்தாலும் கடைசியாக ஆடிய போட்டிகளில் மோசமாக ஆடி தோல்வியை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டிக்கான கொல்கத்தா அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாபா இந்தர்ஜீத் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். இன்றைய போட்டியில் அவர் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பராக களமிறங்க உள்ளார்.
தமிழ்நாடு ரஞ்சி டிராபி அணியில் 18 வயதில் பாபா இந்தர்ஜீத் அறிமுக வீரராக களமிறங்கினார். இவருடைய சகோதரர் பாபா அப்ரஜீத் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். பாபா அப்ரஜீத் மற்றும் பாபா இந்தர்ஜீத் ஆகியோர் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் ஜோடியாக 207 ரன்கள் எடுத்தனர். அத்துடன் ரஞ்சி கோப்பை போட்டியில் ஒரே போட்டியில் சதம் அடித்த முதல் இரட்டை சகோதரர்கள் என்ற பெருமையை பாபா அப்ரஜீத் மற்றும் பாபா இந்தர்ஜீத் பெற்றனர்.
"𝘊𝘩𝘢𝘭𝘭𝘦𝘯𝘨𝘪𝘯𝘨 𝘵𝘩𝘦 𝘤𝘩𝘢𝘭𝘭𝘦𝘯𝘨𝘦 𝘪𝘴 𝘸𝘩𝘢𝘵 𝘪𝘵 𝘮𝘦𝘢𝘯𝘴 𝘵𝘰 𝘣𝘦 𝘢 𝘒𝘯𝘪𝘨𝘩𝘵!" 💜💛
— KolkataKnightRiders (@KKRiders) April 28, 2022
Go well, @IndrajithBaba! 💪#KnightsTV presented by @glancescreen | #KKRHaiTaiyaar #DCvKKR #IPL2022 pic.twitter.com/UNSMhYHDaL
2021ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் பாபா இந்தர்ஜீத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் இவர் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் விளாசினார். குறிப்பாக இறுதிப் போட்டியில் அவர் சதம் விளாசினார். இதைத் தொடர்ந்து இந்தாண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக நடைபெற்ற டிரையல்ஸில் இவர் பங்கேற்றார். அதில் சிறப்பாக பேட்டிங் மற்றும் கீப்பிங் ஆகிய இரண்டிலும் அசத்தினார். இதன்காரணமாக ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் இவரை கொல்கத்தா அணி 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது. இந்தச் சூழலில் நடப்புத் தொடரில் இன்றைய போட்டியில் அறிமுக வீரராக பாபா இந்தர்ஜீத் களமிறங்க உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்