SRH vs RR, Match Highlights: ஹைதராபாத்தை ஓடவிட்ட ராஜஸ்தான்... டேபிள் டாப்பராக முன்னேறி அசத்தல்!
IPL 2022, SRH vs RR: ஓவர்கள் முடியும் முன்பே, வெற்றியாளர் யார் என்பது தெரிந்த நிலையில், சுவாரஸ்யம் இல்லாத போட்டியாக இது அமைந்தது.
![SRH vs RR, Match Highlights: ஹைதராபாத்தை ஓடவிட்ட ராஜஸ்தான்... டேபிள் டாப்பராக முன்னேறி அசத்தல்! IPL 2022: RR won the match by 61 runs against SRH in Match 5 at MCA Stadium SRH vs RR, Match Highlights: ஹைதராபாத்தை ஓடவிட்ட ராஜஸ்தான்... டேபிள் டாப்பராக முன்னேறி அசத்தல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/29/741e510c57ffe29e2c987552e5e5504d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி எதிர்த்து விளையாடியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. ஓப்பனர்களாக களமிறங்கிய பட்லர், யஷஸ்வி அதிரடியாக ஆடினர். பவர்ப்ளே முடியும் வரை விக்கெட் இழப்பின்றி ரன் சேர்த்த இந்த இணை பவர்ப்ளேவுக்கு பிறகு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இருப்பினும், அடுத்து களமிறங்கிய பேட்டர்கள் அதிரடியை தொடங்கினர்.
கேப்டன் சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் அரை சதம் (55) கடக்க, படிக்கல் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுக்க, ஹெட்மேயர் 13 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க என அதிரடியாக விளையாடினார்கள் ராஜஸ்தான் பேட்டர்கள். இதனால் அணியின் ஸ்கோர் மடமடவென உயர்ந்தது. இதனால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி. இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருக்கும் அந்த அணி, ஹைதராபாத் அணி வெற்றி பெற 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) March 29, 2022
An impressive batting display, led by captain @IamSanjuSamson (5⃣5⃣) & ably-supported by @devdpd07 (4⃣1⃣), @josbuttler (3⃣5⃣) & @SHetmyer (3⃣2⃣) power #RR to a strong total. 👍 👍
Scorecard ▶️ https://t.co/GaOK5ulUqE#TATAIPL | #SRHvRR pic.twitter.com/ov4T9tw58o
ஹைதராபாத் அணி பவுலர்களைப் பொறுத்தவரை, உம்ரான் மாலிக், நடராஜன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், ரொமேரியோ தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.
கடினமான இலக்கை சேஸ் செய்த ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். ஏய்டன் மார்க்ரம், வாட்ஷிங்டன் சுந்தர் மட்டும் களத்தில் நின்று ரன் சேர்த்தனர். இதனால், தட்டுத்தடுமாறி 100 ரன்களை கடந்தது அந்த அணி. எனினும், ராஜஸ்தான் அணியின் சிறந்த பந்துவீச்சால், சாஹல் 3 விக்கெட்டுகளும், பிரசித் க்ருஷ்ணா, போல்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத் அணி. ஓவர்கள் முடியும் முன்பே, வெற்றியாளர் யார் என்பது தெரிந்த நிலையில், சுவாரஸ்யம் இல்லாத போட்டியாக இது அமைந்தது. 61 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றிருக்கும் ராஜஸ்தான், இன்றைய போட்டியின் முடிவில் டேபிள் டாப்பராக முன்னேறி இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)