KKRvs RR: அடிச்ச எல்லா அடியும் இடிதான்...பட்லர் சதத்தால் 217 ரன்களை எட்டிய ராஜஸ்தான்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர் மற்றும் படிக்கல் சிறப்பான துவகத்தை தந்தனர்.
இதன்காரணமாக முதல் 6 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 60 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் சிறப்பாக விளையாடிய பட்லர் 29 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். அரைசதம் விளாசிய பிறகும் பட்லர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய தேவ்தத் படிக்கல் ஐபிஎல் வரலாற்றில் 1000 ரன்களை கடந்து அசத்தினார். அவர் 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தப் போது சுனில் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.
If you do it once, you're great.
— Rajasthan Royals (@rajasthanroyals) April 18, 2022
If you do it twice, you're Jos Buttler. 💗 pic.twitter.com/2Yb1EJtqrA
இதைத் தொடர்ந்து களத்திற்கு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அவரும் பட்லர் உடன் இணைந்து அதிரடி காட்ட தொடங்கினார். இதன்காரணமாக ராஜஸ்தான் அணி 15 ஓவர்களின் முடிவில் 163 ரன்கள் எடுத்து அசத்தியது. கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 38 ரன்கள் ஆட்டமிழந்தார். எனினும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த பட்லர் 59 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகளின் உதவியுடன் 100 ரன்களை கடந்தார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் பட்லர் இரண்டாவது முறையாக சதம் கடந்து அசத்தியுள்ளார்.
சதம் கடந்த பிறகு 103 ரன்கள் எடுத்திருந்த பட்லரின் விக்கெட்டை பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார். 17 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் வந்த ரியான் பராக் சுனில் நரேன் பந்துவீச்சில் கம்மின்ஸின் சிறப்பான ஃபீல்டிங்கால் ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 217 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் சுனில் நரேன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்