RR vs LSG Score Live : ராஜஸ்தானிடம் 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த லக்னோ..!
IPL RR vs LSG : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

Background
ஸ்டோய்னிஸ் போராட்டம் வீண்..! 3 ரன்களில் தோற்ற லக்னோ...!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
12 பந்தில் 33 ரன்கள் தேவை...! வெல்லப்போவது யாரு?
லக்னோ அணி வெற்றி பெற கடைசி 12 பந்தில் 33 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் ஸ்டோய்னிஸ், ஆவேஷ்கான் உள்ளனர்.
16 பந்துகளில் 43 ரன்கள் தேவை...! வெற்றி பெற வைப்பாரா ஸ்டாய்னிஸ்..?
லக்னோ அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்த நிலையில் லக்னோ அணியின் வெற்றிக்கு 16 பந்துகளில் 43 ரன்கள் தேவைப்படுகிறது . களத்தில் ஸ்டாய்னிஸ் மற்றும் சமீரா உள்ளனர்.
ஹெட்மயர் அதிரடி...! லக்னோவிற்கு 166 ரன்கள் இலக்கு...!
ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட்மயர் 59 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ராஜஸ்தான் 17 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள்..!
லக்னோ அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்துள்ளது. ஹெட்மயரும், அஸ்வினும் களத்தில் உள்ளனர்.

