IPL 2022: லாக்டவுனில் டிகிரி முடிக்க சொன்ன அம்மா.. ‘நோ’ சொன்ன ஐபிஎல் கேப்டன்..
ராகுல், கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தவர். அவரது தந்தை தேசிய தொழில்நுட்ப கல்லூரில் பேராசியரியராக பணியாற்றியவர்
2022 ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. ஐபிஎல் தொடரில் முதன்முறையாக களமிறங்கிய கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், ராகுல் பற்றிய ஒரு சுவார்ஸ்யமான தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 29 வயதான ராகுல், கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தவர். அவரது தந்தை தேசிய தொழில்நுட்ப கல்லூரில் பேராசியரியராக பணியாற்றியவர். ஆனால், முழு நேர கிரிக்கெட்டராக மாறி இருக்கும் ராகுல் இன்னும் டிகிரி படிப்பை முடிக்காதவர். இதனால், படிப்பை முடிக்கும்படி அவரது தாயார் வற்புறுத்தி இருக்கிறார்.
ஆனால், தான் ஒரு முழு நேர கிரிக்கெட்டராக இருப்பதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக தேசிய அணிக்காக விளையாடி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனால், 30 அரியர் பேப்பர்களை எழுதி டிகிரி வாங்க வேண்டும் என்பது நடக்காத காரியம் என தனது தயாரிடம் சொல்லியதாக ராகுல் தெரிவித்திருக்கிறார்.
View this post on Instagram
முன்னதாக, நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல் ராகுல் வந்த வேகத்தில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே டக்-அவுட்டாகி வெளியேறினார். ஷமி இந்த போட்டியின் முதல் விக்கெட்டை எடுத்தார். அதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சொதப்பினர். இதனால், 20 ஓவர் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு லக்னோ அணி 158 ரன்கள் எடுத்தது.
இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய குஜராத் அணிக்கு, ஓப்பனர் கில் டக்-அவுட்டானார். மேத்யூ வாடே 30 ரன்கள் எடுத்து அவுட்டாக அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் ஆகியோர் ரன்கள் சேர்த்தனர். அவர்களுடன் சேர்ந்த திவேத்தியா 21 பந்துகளில் 40* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 19.4 ஓவர்கள் முடிவில் 161 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது குஜராத் அணி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்