IPL 2022: கிரவுண்ட்ஸ்மேன்களுக்கும் பரிசுத்தொகை: 2022 ஐபிஎல் விருதுகள் முழு விவரம்!
புனேவின் ஈடன் கார்டன்ஸ் மற்றும் நரேந்திர மோடி ஸ்டேடியத்துக்கு தலா ரூ.12.5 லட்சம் பரிசுத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது
இந்த சீசனில் ஐபிஎல் போட்டிகள் நடந்த ஆறு மைதானங்களில் கியூரேட்டர்கள் மற்றும் கிரவுண்ட்ஸ்மேன்களுக்கு ரூ.1.25 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி சிசிஐ, வான்கடே, டிஒய் பாட்டீல் மற்றும் எம்சிஏ ஆகிய ஸ்டேடியங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், புனேவின் ஈடன் கார்டன்ஸ் மற்றும் நரேந்திர மோடி ஸ்டேடியத்துக்கு தலா ரூ.12.5 லட்சமும் பரிசுத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
BCCI announces a prize money of Rs 1.25 crores for the curators and groundsmen across 6 IPL venues this season - Rs 25 lakhs each for CCI, Wankhede, DY Patil and MCA, Pune and Rs 12.5 lakhs each for Eden Gardens and Narendra Modi Stadium, tweets BCCI Secretary Jay Shah#IPL2022 pic.twitter.com/Il0feU26oa
— ANI (@ANI) May 30, 2022
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 15வது சீசன் இறுதிபோட்டி (நேற்று) ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தாங்கள் பங்கேற்ற முதல் சீசனிலேயே குஜராத் அணி பட்டம் பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
முதலில் டாஸ் வென்ற RR கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் ராயல்ஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்கினர், ஆனால் பவர்பிளேக்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் விக்கெட்கள் சரசரவென சரிய தொடங்கியது. குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மிகவும் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை அள்ளினார். இவருக்கு உறுதுணையாக தமிழக வீரர் சாய் கிஷோர் 2 விக்கெட்களை சாய்க்க, சமி,தயாள், ரசித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். இதன்மூலம், 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்கள் 130 ரன்கள் மட்டும் எடுத்தது. அதன்பிறகு களமிறங்கிய குஜராத் அணி 18.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றி 34 ரன்கள் குவித்து குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட விருதுகளை கீழே பார்க்கலாம்!
சஞ்சு சாம்சன் ரன்னர்-அப் கோப்பை மற்றும் ரூ. 12.5 கோடியை பெற்றார்.
ஜோஸ் பட்லர் மிகவும் மதிப்புமிக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸின் எதிராக சிறப்பான கேட்சை பதிவு செய்த எவின் லூயிஸின் பெஸ்ட் ஆப் தி சீசன் அவார்ட் வழங்கப்பட்டது.
ஜோஸ் பட்லர் இந்த சீசனில் 863 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.
யுஸ்வேந்திர சாஹல் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார்.
ஜோஸ் பட்லர் 83 ஃபோர்ஸ் அடித்து அதிக ஃபோர்ஸ் அடித்த வீரர் என்ற விருதை பெற்றார்.
லாக்கி பெர்குசன் சீசனின் வேகமான டெலிவரி விருதை வென்றார்.
ஜோஸ் பட்லர் சீசனின் பவர் பிளேயர்.
ஃபேர்பிளே விருதை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் பகிர்ந்து கொண்டன.
இந்த சீசன் முழுவதும் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லருக்கு கேம்சேஞ்சர் அவார்டு வழங்கப்பட்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தினேஷ் கார்த்திக் 183.33 ஸ்ட்ரைக் ரேட்டுடன் போட்டியை முடித்ததற்காக 'சூப்பர் ஸ்டிரைக்கர்' விருதைப் பெற்றார். அவருக்கு டாடா பஞ்ச் காரும் பரிசாக வழங்கப்பட்டது.
ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக நேற்றைய போட்டியில் 45 ரன்கள் எடுத்ததற்காக 'லெட்ஸ் கிராக் இட் சிக்ஸஸ்' விருதை வென்றார்.
வளர்ந்து வரும் வீரர் விருதை உம்ரான் மாலிக் வென்றார்