IPL 2022: ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத உமேஷ்... ஐபிஎல் சீசனில் பதில் சொல்லி சபாஷ்!
இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடி இருக்கும் உமேஷ், 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப்பை கைப்பற்றி இருக்கிறார். மேலும், இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் எட்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.
உமேஷ் யாதவ் - ப்ர்பிள் கேப்
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களை கூட முழுதாக விளையாடாமல், 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில், உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த ஐபிஎல் தொடருக்கான் ஆக்ஷன் நடைபெற்றபோது முதல் சுற்றில் உமேஷ் யாதவை எந்த அணியும் வாங்கவில்லை. அதனை அடுத்து இரண்டாவது சுற்றில் கொல்கத்தா அணி உமேஷை தேர்வு செய்தது. இந்நிலையில், இன்றைய போட்டி முடிவில் இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடி இருக்கும் உமேஷ், 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப்பை கைப்பற்றி இருக்கிறார். மேலும், இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றி இருக்கிறார்.
.@y_umesh played just 2 games in last 2 seasons in the IPL. And even with the Indian team he only gets a game when someone's injured or rested. But such is his attitude that you never see him complain. Warms my heart to see him do well. One of the good guys. #KKRvPBKS #IPL2022 pic.twitter.com/MFDwiNgJWr
— Wasim Jaffer (@WasimJaffer14) April 1, 2022
ரஸல் - ஆரஞ்ச் கேப்
FIFTY!
— IndianPremierLeague (@IPL) April 1, 2022
What a half-century for @Russell12A. Full of fireworks 💥💥
Live - https://t.co/lO2arKbxgf #KKRvPBKS #TATAIPL pic.twitter.com/3ODVKJGoAu
எளிதான இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா அணிக்கு, ஓப்பனர்கள் ரஹானே, வெங்கடேஷ் ஐயர் ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ், சாம் பில்லிங்ஸ் சிறப்பாக ஆட, 26 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்ரேயாஸ் அவுட்டானார். அவரை அடுத்து பேட்டிங் வந்த ரஸல் வெறியாட்டம் ஆடினார். 31 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 14.3 ஓவர்களில் இலக்கை எட்டி போட்டியை வென்றது கொல்கத்தா அணி. ஓவர்கள் அதிகம் மீதம் இருக்கையில் போட்டியை வென்றிருக்கும் கொல்கத்தா அணி, நல்ல ரன் ரேட்டுடன் ஐபிஎல் தரவரிசைப் பட்டியலில் இப்போது முதல் இடம் பிடித்திருக்கிறது.
ரஸல், விளையாடியுள்ள 3 போட்டிகளில் 95 ரன்களோடு ஆரஞ்ச் கேப்பை பெற்றிருக்கிறார். 93 ரன்களுடன் டுப்ளிசி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதனால், இன்றைய போட்டியின் முடிவில் ஆரஞ்ச், ப்ர்பிள் கேப் இரண்டும் கொல்கத்தா அணி வீரர்களின் வசம் சென்றடைந்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்