KKR vs MI Innings Highlights: வெங்கடேஷ் அய்யர் அசத்தல்..மும்பைக்கு 158 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.
ஐ.பி.எல் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 59 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. மீதமுள்ள 8 அணிகளும், பிளே-ஆஃப் சுற்றுக்காக முட்டி மோதி வருகின்றன.
இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று, தங்களது பிளே-ஆஃப் வாய்ப்பை இறுதி செய்ய அந்த அணிகள் தீவிரம் காட்டுகின்றன. அந்த வகையில், இன்று (மே 11) நடைபெறும் 60 லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் விளையாடின.
அதன்படி இன்றைய போட்டியின் போது கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் மழை வந்ததால் டாஸ் போடுவதில் தாமதமானது. இதானால் போட்டியில் 16 ஓவர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. அந்தவகையில் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கினார்கள். இதில் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்ட பிலிப் சால்ட் அடுத்த சில பந்துகள் மட்டுமே களத்தில் நின்று 6 ரன்களுடன் நடையைக்கட்டினார். பின்னர் வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். இதனிடையே சுனில் நரைன் பும்ரா பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 7 ரன்களில் விக்கெட்டை இழக்க மறுபுறம் அதிரடியகா விளையாடி வந்தார் வெங்கடேஷ் அய்யர். அதன்படி 21 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 42 ரன்களை விளாசினார்.
158 ரன்கள் இலக்கு:
பின்னர் நிதிஷ் ராணா மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் கொல்கத்தா அணிக்கு ஒரளவிற்கு ரன்களை சேர்த்தனர். இதில் 23 பந்துகள் களத்தில் நின்ற நிதிஷ் ராணா 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸட் உட்பட மொத்தம் 33 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனைத்தொடர்ந்து ரஸ்ஸலுடன் ஜோடி சேர்ந்தார் ரிங்கு சிங். அப்போது ரஸ்ஸல் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவரது விக்கெட்டை பியூஸ் சாவ்லா கைப்பற்றினார். அதேபோல் கடைசி ஓவரில் ரிங்க் சிங் அவுட் ஆனார். மொத்தம் 12 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 சிக்ஸர்கள் உட்பட 20 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக 16 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157ரன்கள் எடுத்தது. அதன்படி மும்பை அணி 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்கிறது.