GT vs LSG: 82 ரன்களுக்கு சுருண்ட லக்னோ.. முதல் அணியாய் ப்ளே ஆஃப் சீட்டை கைப்பற்றியது குஜராத்!
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது ஹரிதிக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணி.
2022 ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமாக ஆடிய சுப்மன் கில், அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், முதலில் பேட் செய்த குஜராத் அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.
இந்த ஐ.பி.எல். தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் அணியும், லக்னோ அணியும் அனுபவம் வாய்ந்த அணிகளையே வீழ்த்தும் அளவிற்கு வலிமை மிகுந்த அணிகளாக இந்த தொடரில் வலம் வருகின்றனர். இந்நிலையில், 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சேஸ் செய்த லக்னோ அணி, சீட்டுக்கட்டு சரிவதுப்போல விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்தது. ரஷீத் கான் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
#IPL2022 | குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இன்று களமிறங்கிய தமிழக வீரர் சாய் கிஷோர் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தல்!https://t.co/wupaoCQKa2 | #gujarattitans #LucknowSuperGiants #GTvsLSG #LSGvGT #IPL #Saikishore pic.twitter.com/zcSgY8dpI6
— ABP Nadu (@abpnadu) May 10, 2022
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி, முழுமையாக 20 ஓவர்களை விளையாடவில்லை. 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 82 ரன்களுக்கு சுருண்ட லக்னோ அணி, குஜராத் அணிக்கு அதிரடியான ஒரு வெற்றியை பரிசளித்திருக்கிறது.
That's that from Match 57.@gujarat_titans win by 62 runs and become the first team to qualify for #TATAIPL 2022 Playoffs.
— IndianPremierLeague (@IPL) May 10, 2022
Scorecard - https://t.co/45Tbqyj6pV #LSGvGT #TATAIPL pic.twitter.com/PgsuxfLKye
இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது ஹரிதிக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்