GT vs DC, IPL 2023: குஜராத் - டெல்லி பலப்பரீட்சை.. களமிறக்கும் பிளேயிங் லெவன் விவரம் இதோ
ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டியில், இரு அணிகள் சார்பில் களமிறங்கும் பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டியில், இரு அணிகள் சார்பில் களமிறங்கும் பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐபிஎல் சீசன்:
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில், ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது முதல் பாதி போட்டிகளில் விளையாடி விட்டது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
டெல்லி - குஜராத் மோதல்:
இந்த நிலையில் இன்று நடைபெறும் தொடரின் 44வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த சூழலில் இரு அணிகளும் மோதும் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இரு அணிகள் சார்பில் களமிறங்கும் பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெலியிடப்பட்டுள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ஹர்திக் பாண்டியா(கேப்டன்) , டேவிட் மில்லர் , விஜய் ஷங்கர் , ராகுல் திவாடியா , விருத்திமான் சஹா(விக்கெட் கீப்பர்) , ரஷித் கான் , அபினவ் மனோகர், முகம்மது ஷமி , ஜோஸ்வா லிட்டில் , மோகித் ஷர்மா , நூர் அகமது
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
சுப்மன் கில், சாய் கிஷோர், கே.எஸ் பரத், சாய் சுதர்ஷன், சிவம் மாவி
டெல்லி கேபிடல்ஸ் அணி:
டேவிட் வார்னர், பிலிப் சல்ட், ரிலே ரோஸோ, மணிஷ் பாண்டே, பிரியம் கார்க், அக்ஷர் படேல், ரிபால் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, அமன் கான்
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
கலீல் அகமது, லலீத் யதவ், யாஷ் தல், பிரவீன் துபே, அபிஷேக் போரல்
இதுவரை நடந்தது என்ன?
குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. கடந்தாண்டு நடந்த போட்டியிலும், நடப்பு சீசனில் டெல்லியில் நடந்த போட்டியிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றது. இதனால் இன்று நடக்கும் ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்று குஜராத் அணியை பழிதீர்க்க முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சொந்த மைதானத்தில் களமிறங்குவது குஜராத் அணிக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.