மேலும் அறிய

IPL DELHI WIN : புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது டெல்லி : போராடி தோற்றது சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 136 ரன்களை 2 பந்துகள் மீதம் வைத்து டெல்லி அணி எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

ஐ.பி.எல். தொடரின் 50வது போட்டியில்  சென்னை அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய டுப்ளிசிஸ்- ருதுராஜ் ஜோடி முதல் 2 ஓவர்களிலே 26 ரன்களை எடுத்தனர். ஆனால், அக்‌ஷர் படேல் வீசிய மூன்றாவது ஓவரில் பாப் டுப்ளிசிஸ் 10 ரன்களிலும், அடுத்த ஓவரில் ருதுராஜ், கெய்க்வாட் 13 ரன்னில் வெளியேறினார்.

டெல்லியின் சிறப்பான பந்துவீச்சால் மொயின் அலியும், சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக கிடைத்த உத்தப்பாவும் அடுத்தடுத்து அவுட்டாகினர். 9 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகள் விழுந்ததால் அம்பத்தி ராயுடுவும் – தோனியும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். சென்னை அணி 17வது ஓவரில்தான் 100 ரன்களையே கடந்தது.

IPL DELHI WIN : புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது டெல்லி : போராடி தோற்றது சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18வது ஓவரில்தான் தனது முதல் சிக்ஸரை அடித்தது. கடைசி ஓவரில் தோனியை அவுட்டாக்கியதுடன் ஆவேஷ்கான் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சென்னை, 20 ஓவர்கள் முடிவில் 136 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சென்னை அணியில் அம்பத்தி ராயுடு அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியில் அக்‌ஷர்படேல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அதிரடி தொடக்கத்தை தந்த பிரித்விஷா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் வெற்றி பெறவைத்த ஸ்ரேயாஸ் அய்யர் 2 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பிறந்தநாள் நாயகன் ரிஷப்பண்ட் வந்தது முதல் அதிரடியாக ஆடினார். அவர் 12 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  

IPL DELHI WIN : புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது டெல்லி : போராடி தோற்றது சென்னை

இதையடுத்து, ஜோடி சேர்ந்த ஷிகர் தவானும், அறிமுக வீரர் ரிப்பல் படேலும் அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினர். ஆனால், ஸ்கோரை உயர்த்த அதிரடியாக ஆட முயன்ற ரிப்பல் படேல் 18 ரன்னில் வெளியேறினார். அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் அஸ்வினும் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒருமுனையில் விழுந்தாலும் டெல்லி வெற்றிக்காக போராடிய தொடக்க வீரர் ஷிகர்தவான் ஷர்துல் தாக்கூர் பந்தில் 39 ரன்னில் வெளியேறினார்.

டெல்லி அணியின் வெற்றிக்கு 30 பந்தில் 38 ரன்கள் தேவைப்பட்டது. ஹெட்மயரும், அக்ஷர் படேலும் சிங்கிள்களாக ரன்களை எடுத்தனர். ட்வேய்ன்  ப்ராவோ வீசிய ஆட்டத்தின் 18வது ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரில் டேஞ்சர் பேட்ஸ்மேன் ஹெட்மயர் கைக்கே அளித்த கேட்ச்சை சென்னை வீரர் கிருஷ்ணப்ப கவுதம் தவறவிட்டார். மேலும், அந்த பந்து பவுண்டரியாகவும் மாறியது. அந்த ஓவரில் மட்டும் டெல்லி 12 ரன்களை எடுத்தது.

IPL DELHI WIN : புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது டெல்லி : போராடி தோற்றது சென்னை

ஹேசில்வுட் வீசிய 19வது ஓவரில் ஹெட்மயர் ஒரு சிக்ஸர் அடித்த ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பாக்கினார். இதனால், 6 பந்தில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற விறுவிறுப்பான நிலை ஏற்பட்டது. ப்ராவோ வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் 2 ரன்களுடனும், இரண்டாவது பந்தை ப்ராவோ வைடாக வீசினார். இதனால் 5 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 3வது பந்தில் அக்‌ஷர் படேலை ப்ராவோ அவுட்டாக்கினார். இதனால் 3 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற விறுவிறுப்பான சூழல் ஏற்பட்டது. 4வது பந்தில் களமிறங்கிய ரபாடாவிற்கு ப்ராவோ யார்க்கராக வீசிய பந்தை ரபாடா அழககாக பவுண்டரிக்கு அனுப்பி டெல்லியை வெற்றி பெறவைத்தார். ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 18 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்தார்.

சென்னை அணியில் ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தீபக் சாஹர், ஹேசல்வுட், ப்ராவோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி சென்னையை பின்னுக்கு தள்ளியது. சென்னை அணி தொடர்ச்சியாக சந்தித்த இரண்டாவது தோல்வி இதுவாகும். 

தலைப்பு செய்திகள்

TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
Embed widget