CSK vs LSG, IPL 2023: தோல்வியை தவிர்க்குமா சென்னை?.. டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங்
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
சென்னை - லக்னோ மோதல்:
ஐபிஎல் 16வது சீசனின் 46வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத மோதுகின்றன. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் லக்னோ அணி இன்று களமிறங்குகிறது. அதேநேரம் இந்த போட்டியில் கேப்டன் கே.எல். ராகுல் இல்லாதது அந்த அணிக்கு, பின்னடைவாக கருதப்படுகிறது.
நேருக்கு நேர்:
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி இதுவரை 2 முறை மட்டுமே மோதியுள்ளது. இதில், இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளது.
- விளையாடிய மொத்த போட்டிகளின் எண்ணிக்கை: 2
- எல்எஸ்ஜி வென்ற போட்டிகள்: 1
- சிஎஸ்கே வென்ற போட்டிகள்: 1
- எல்எஸ்ஜிக்காக அதிக ரன்கள்: 61 (குயின்டன் டி காக்)
- சிஎஸ்கேக்காக அதிக ரன்கள்: 76 (சிவம் துபே)
- எல்எஸ்ஜிக்காக அதிக விக்கெட்டுகள்: 5 (ரவி பிஷ்னோய்)
- சிஎஸ்கே அதிக விக்கெட்டுகள்: 4 (மொயீன் அலி)
- எல்எஸ்ஜிக்காக அதிக கேட்சுகள்: 2 (மார்க் வூட் & ரவி பிஷ்னோய்)
- சிஎஸ்கேக்காக அதிக கேட்சுகள்: 2 (பென் ஸ்டோக்ஸ், எம்எஸ் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா)
புள்ளிப்பட்டியல் விவரம்:
லக்னோ அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 127 ரன்களை துரத்திய லக்னோ அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த போட்டியின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப சென்னை அணி ஆர்வம் காட்டி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. சென்னை அணி தாங்கள் விளையாடிய கடைச் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால், இன்றைய போட்டியில் கட்டாய வெற்றியுடன் களமிறங்கும்.
LSG vs CSK பிட்ச் அறிக்கை:
லக்னோ மைதானத்தில் இதுவரை நடந்த 5 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 4ல் வெற்றி பெற்றுள்ளது. லக்னோ இதுவரை தங்களது சொந்த மைதானத்தில் 2 முறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பிட்சானது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால், ரன் அடிக்க இரு அணி வீரர்களும் திணறுவார்கள்.