மேலும் அறிய

CSK vs DC: ப்ளே ஆஃப் கனவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சிஎஸ்கே... 91 ரன்களில் அபார வெற்றி!

91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கும் சென்னை அணி, இன்னும் ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

ஐ.பி.எல். தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

அதனை அடுத்து சென்னை அணிக்காக ஓப்பனிங் களமிறங்கிய டெவன் கான்வே, ருத்துராஜ் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. நிதானமாக ஆடிய கான்வே, அரை சதம் கடந்து அசத்தினார். அவரை அடுத்து ருத்துராஜூம் அரை சதம் கடப்பார் என எதிர்ப்பார்த்தபோது, 43 ரன்களுக்கு அவுட்டாகினார். விக்கெட் சரிந்தாலும், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே, 87 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருக்கிறது சென்னை அணி. 

கடினமான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பத்திலே சறுக்கல் இருந்தது. பரத், வார்னர் அடுத்தடுத்து அவுட்டாக நிதானமாக ரன் சேர்த்த மிட்சல் மார்ஷை மொயின் அலி அவுட்டாக்கினார். அவரை அடுத்து களமிறங்கிய பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சிறப்பாக பந்துவீசிய சென்னை அணி பந்துவீச்சாளர்களில் மொயின் அலி 3 விக்கெட்டுகளும், முகேஷ், சிம்ரன் ஜித், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மஹீஷ் தீக்‌ஷன்னா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். இதனால், 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போட்டியில் தோல்வி அடைந்தது டெல்லி அணி.

91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கும் சென்னை அணி, இன்னும் ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதனால், ஐபிஎல் தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் சிஎஸ்கே இன்னும் கவனமாக விளையாடும் என தெரிகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget