CSK vs MI: வான்கடே மைதானத்தில் சென்னை ரசிகர்களுக்கு தடையா..? மும்பை ஆர்மியை இறக்க நீதா அம்பானி ப்ளான்..?
எல் க்ளாசிக்கோ என்று பெருமையாக அழைக்கப்படும் இந்த போட்டியை காண வரும் ரசிகர்கள் மும்பை அணி நிர்வாகம் விதித்துள்ள நிபந்தனைகளால் சிரமப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.
இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியைக்கான மும்பை ரசிகர்கள் அதிகம் இருக்கும்படியான ஏற்பாடுகளை நீதா அம்பானி செய்துள்ளதாகவும், இதனால் சென்னை அணி ரசிகர்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
எல்-க்ளாசிக்கோ
ஐபிஎல் போட்டிகளின் தலையாய போட்டியாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி நெருங்கிவிட்டது. ஐந்து முறை சாம்பியனான மும்பை அணியும், நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை அணியும் இன்று மாலை 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் துவங்கும் போட்டியில் மோதும் நிலையில், ரசிகர்கள் குதூகலம் அடைந்துளனர். எல் க்ளாசிக்கோ என்று பெருமையாக அழைக்கப்படும் இந்த போட்டி எல்லா வருடமும் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இருக்கும். இந்த நிலையில் இந்த போட்டியை காண வரும் ரசிகர்கள் மும்பை அணி நிர்வாகம் விதித்துள்ள நிபந்தனைகளால் சிரமப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.
சென்னை - மும்பை
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரசிகர்களை கொண்ட இவ்விரு அணிகள் ஆடும் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதே போல அந்தந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் ஆண்டுதோறும் நடைபெறும் சமூக வலைதள சண்டைகளுக்கு களத்தில் முடிவுகட்டும் விதமாக இந்த போட்டி அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைப்பது வழக்கம். இப்படிப்பட்ட போட்டி இன்று நடைபெறும் நிலையில் போட்டியிற் நேரில் காணும் ஆசை ஒவ்வொரு ரசிகருக்கும் இருக்கும்.
அலைமோதும் ரசிகர்கள்
இதே தொடரில் இரு அணிகள் ஆடும் போட்டி சென்னையிலும் ஒன்று நடைபெறும் என்றாலும், தீவிர சென்னை ரசிகர்கள் மும்பைக்கு சென்றும் பார்க்க வாய்ப்புள்ளது. அதிலும் சென்னை அணிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசுகர்கள் அதிகம் என்பதால் மஞ்சள் நிறம் கூடுதலாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏனென்றால் தோனிக்கான ரசிகர் கூட்டம் உலகளாவியது என்பதே நிதர்சனம். அதனை முன்னர் நடந்த போட்டிகளே நிரூபிக்கின்றன. முன்பு வான்கடேயில் நடந்த போட்டிகளில் கூட ஒரே மஞ்சள் நிறமாக காட்சியளித்த கதைகள் உண்டு. அதனை தடுக்க மும்பை அணி உரிமையாளர் நீதா அம்பானி சில திட்டங்களை வகுத்துள்ளாராம்.
நீதா அம்பானியின் திட்டம்
இவ்வருடமும் ஆர்சிபி போட்டியின்போது மைதானம் சிவப்பு நிறத்தில் நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி, நீதா அம்பானி சென்னை ரசிகர்களை தடுக்கும் வழியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு கேலரிக்கள் முழுவதையும் மும்பை அணி ரசிகர்களுக்காக நீதா அம்பானி புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த கேலரிக்களுக்குள் சென்னை ரசிகர்களை விடக்கூடாது என்றும், அங்கு வருபவர்கள் மும்பை ஜெர்சி அணிந்து மட்டும்தான் வரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துளள்ன. இதனால் டிக்கெட்கள் குறைவாக கிடைப்பதாகவும், சென்னை ரசிகர்கள் டிக்கெட் இன்றி தவிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.