இந்திய மகளிர் கால்பந்து அணி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பிரேசில் நாட்டில் நான்கு நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கால்பந்து தொடர் ஒன்றில் இந்திய அணி பங்கேற்றுள்ளது.  பிரேசிலில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியாவுடன் சிலி மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.




இந்த நிலையில், இன்று காலை பிரேசில் நாட்டின் மானஸ் நகரில் இந்தியாவிற்கும், பிரேசில் நாட்டிற்குமான கால்பந்து ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆட்டம் தொடங்கியது முதல் பிரேசில் வீராங்கனைகள் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினர். இருப்பினும் இந்திய வீராங்கனைகள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.






அசலதா தேவி தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் மணிஷாகல்யாண் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தினார். பிரேசில் அணி ஆக்ரோஷமாக ஆடிக்கொண்டிருந்த வேளையில் இந்திய கோல்கீப்பர் தரப்பில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை இந்திய வீராங்கனைகள் லாவகமாகவும், சிறப்பாகவும் பாஸ் செய்ய. மணிஷா கல்யாண் அதை சிறப்பாக அடித்து கோலாக்கினார்.


பலம்மிகுந்த பிரேசில் அணிக்கு எதிராக இந்திய வீராங்கனை கோல் அடித்தது மிகப்பெரிய விஷயமாகவே கருதப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய 1-4 என்ற கணக்கில் தோல்வியை தழுவினாலும், கோல் அடித்த மணிஷா கல்யாணுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




இந்திய அணி வரும் 29-ந் தேதி சிலி அணியையும், டிசம்பர் 2-ந் தேதி வெனிசுலா அணியையும் சந்திக்க உள்ளது. இந்த போட்டிகள் இந்திய நேரப்படி நள்ளிரவு 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. பிரேசில் அணிக்கு எதிரான தோல்வி மூலமாக இந்திய அணி அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய மகளிர் அணி நடப்பாண்டில் மட்டும் துருக்கி, செர்பியா, உஸ்பெகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க :Morning Headlines: 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...! 3 மாவட்டங்களில் மிக கனமழை அபாயம்..! முக்கியச்செய்திகள் இங்கே


மேலும் படிக்க : Ind-Pak 2021 WC: அதிகம் பேர் கண்டு களித்த சர்வதேச டி20 மோதல்! ரெக்கார்டு படைத்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்!


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண