உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணிகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஆரோன் பிஞ்ச் செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பர் டிம்பெய்ன் கேப்டனாக பொறுப்பு வகித்து வருகிறார்.




கடந்த 2018ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற டிம்பெய்ன் மீது அப்போது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு அளித்தார். அந்த பெண் அளித்த குற்றச்சாட்டில், டிம்பெய்ன் தனக்கு ஆபாசமாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அப்போதைய விசாரணையில் டிம்பெய்ன் மீது எந்த குற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.






ஆனால், தற்போது அந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகிய நிலையில், கடந்த வாரம் டிம்பெய்ன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக முன்னாள் கேப்டன் ஸ்டீவ்ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.




ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்க வேகப்பந்து வீச்சாளராக கேப்டன் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.  1956ம் ஆண்டு ரே லிண்ட்வால் ஒரு போட்டியில் கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். 1900 காலகட்டங்களில் மாண்டிநோபிள் மற்றும் ஜேக் ரைடர் ஆகிய பந்துவீச்சாளர்களும் கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளனர். சுமார் 65 ஆண்டுகளுக்கு பிறகு  ஆஸ்திரேலியா டெஸ்ட் அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.


28 வயதான பாட் கம்மின்ஸ் 34 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 164 விக்கெட்டுகளையும், 69 ஒருநாள் போட்டிகளில் ஆடி 111 விக்கெட்டுகளையும், 37 டி20 போட்டிகளில் ஆடி 42 விக்கெட்டுகளையும், 37 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 38 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். உலகப்புகழ் பெற்ற இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்னும் மூன்று வாரங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண