உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் அடித்தன் மூலம்  இந்த நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐசிசி இறுதிப்போட்டியில் சதம அடித்த ஒரே என்கிற சாதனையை படைத்தார் ஏய்டன் மார்க்ரம். 

WTC இறுதிப்போட்டி: 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் ஐசிசி போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தென் ஆப்பிரிக்காவும் விளையாடி வருகிறது. 

ஓங்கியிருந்த ஆஸி கை

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்மித், வெப்ஸ்டரின் சிறப்பான அரைசதத்தால் 212 ரன்களை எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆஸி அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் அலேக்ஸ் கேரி, ஸ்டார்க் போன்ற பின் வரிசை வீரர்கள் சிறப்பாக வ் விளையாடி 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா. ஆனாலும், 74 ரன்கள் முன்னிலை கிடைத்ததால் 281 ரன்கள் முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா. இதனால், 282 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவிற்கு நிர்ணயித்தது. 

தென் ஆப்பிரிக்கா அபாரம்: 

இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி ரிக்கல்டன் 6 ரன்களுக்கு வெளியேற முல்டர் மற்றும் மார்க்கரம் நிதானமாக ஆடி அணியை வெற்றி நோக்கி பயணிக்க வைத்த்னர். முல்டர் 27 ரன்களுக்கு வெளியேற பவுமாவுடன் ஜோடி சேர்ந்தார் மார்க்ரம்.

சதம் விளாசிய மார்க்ரம்:

மார்க்ரம் - கேப்டன் பவுமா ஜோடி ஆஸ்திரேலியாவிற்கு தலைவலியாக மாறினர். இலக்கை அடைய தங்களது பார்ட்னர்ஷிப் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த இவர்கள் இருவரும் நிதானம் காட்டினர். கேப்டன் கம்மின்ஸ் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன், வெப்ஸ்டர், டிராவிஸ் ஹெட் என பல பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியவில்லை. 

மார்க்ரம் சாதனை:

மார்க்ரம் தனது 8வது டெஸ்ட் சதத்தை அடித்தார், இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த நூற்றாண்டில் (2001-க்கு பின்) ஐசிசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் விளாசியவர் என்ற சாதனை படைத்தார் தென்னாப்ரிக்க வீரர் எய்டன் மார்க்ரம். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பாவன் க்ளைவ் லாய்ட் - 1975  ஆண்டிலும், இலங்கை வீரர் அரவிந்த டி-சில்வா - 1996 ஆண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதிப்போட்டியிலும் சதம் அடித்துள்ளனர். 

மேலும் ஐசிசி இறுதிப் போட்டியில் சதம் விளாசிய முதல் தென்னாப்ரிக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இது மட்டுமில்லாம லார்ட்ஸ் மைதானத்தில் 1994-க்குன் பிறகு நான்காவது இன்னிங்ஸ்சில் சதமடித்த வீரர் என்கிற சாதனைக்கும் மார்க்ரம் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.