தமிழ்நாடு :



  • கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • காற்று உந்துதல் குறைவு காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவில்லை – வானிலை ஆய்வு மையம்

  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று மிககனமழைக்கு வாய்ப்பு

  • 8 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 25 செ.மீ. மழை – திருச்செந்தூர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது

  • திருநெல்வேலியில் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம் – படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்பு

  • திண்டுக்கல்லில் 6 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை : மதுரையிலும் கொட்டித்தீர்த்தது

  • கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்தது: பண்ணைப் பசுமை கடைகளில் ரூபாய் 75க்கு விற்பனை

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அ.தி.மு.க.வில் இன்று முதல் விருப்பமனு விநியோகம்

  • தமிழ்நாட்டில் இனி வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணி

  • கடலூர் தி.மு.க. எம்.பி. வழக்கு : சி.பி.ஐ.க்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு


இந்தியா



  • சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  • பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மறுபரிசீலனை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

  • ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூபாய் 10 ஆக குறைப்பு – தெற்கு ரயில்வே

  • நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17ல் இருந்து 19 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்


உலகம்:



  • கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு மாத அவசர நிலையை பிறப்பித்தது செக் குடியரசு நாடு

  • கொரோனா பாதிப்பை மீண்டும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் இங்கிலாந்து 


விளையாட்டு:



  • நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 258 ரன்கள்

  • அறிமுகப் போட்டியிலே ஸ்ரேயாஸ் அய்யர் 75 ரன்கள் குவித்து அசத்தல்


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண