மேலும் அறிய

ZIM vs IND T20I: தொடரை கைப்பற்றுமா கில்லின் இளம்படை? 4வது டி20 போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்

ZIM vs IND T20I: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

ZIM vs IND T20I: இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே மோதல்:

ஐசிசி உலகக் கோப்பயை வென்ற மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டி20 போட்டியில் எதிர்பாராத விதமாக இந்திய அணி அதிர்ச்சி தோல்வியுற்ற நிலையில், அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்று வலுவான கம்பேக் கொடுத்துள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

தொடரை வெல்லுமா இந்தியா அணி?

இரு அணிகளும் மோதும் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் சோனி லைவ் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற, கில் தலைமயிலான இளம் அணி தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வெல்வதன் மூலம், தொடரை வெல்லும் வாய்ப்பை நீட்டிக்க ஜிம்பாப்வே அணியும் மல்லு கட்டுகிறது.

பலம், பலவீனங்கள்:

இந்திய அணியை பொறுத்தவரை ஐபிஎல் தொடர்களில் மட்டுமின்றி, சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த அனுபவம் தான் கடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற உதவியாக அமைந்தது. கில், கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் போன்ற வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் முகேஷ் குமார் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோ அதகளம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு போட்டிகளை போலவே இன்றும் கூட்டாக செயல்பட்டாலே இந்திய அணி எளிதில் வெற்றி பெற முடியும்.

நேருக்கு நேர்:

சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 8 முறையும், ஜிம்பாப்வே அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

மைதானம் எப்படி?

போட்டி நடைபெறும் ஹராரே மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும். இதனால், இன்றைய போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது. 180-க்கும் அதிகமான ரன்களை சேர்த்தால், முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றிக்காக போராடலாம்.

உத்தேச பிளேயிங் லெவன்:

இந்தியா: சுப்மன் கில், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், துருவ் ஜூரல், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது, ரவி பிஷ்னோய்

ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், தடிவான்ஷே மருமணி, சிக்கந்தர் ராஜா, ஜொனாதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே, இன்னசென்ட் கையா, வெஸ்லி மாதேவெரே, லூக் ஜாங்வே, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்ஸிங் முசரபானி, ரிச்சர்ட் நக்ராவா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget