WTC Final Commentators: அடடே..இவங்களுக்காகவே மேட்ச் பாக்கலாமே.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வர்ணனையாளர்கள் லிஸ்ட் இதோ..!
WTC Final Commentators: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வர்ணனையாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
WTC இறுதிப் போட்டி 2023, இந்தியா vs ஆஸ்திரேலியா வர்ணனையாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் வர்ணனை செய்ய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் இந்திய அணி தரப்பிலும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மேத்யூ ஹைடன் மற்றும் நாசர் ஹூசன் ஆகியோர் வர்ணனை செய்வார்கள் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2021 - 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டி மீது பெரும் ஆர்வத்தினை காட்டி வருகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, அணிகளுக்கு இடையில் ஜூன் 7-11, 2023 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றில் நேரலையாக காணமுடியும். இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவை ஆங்கிலம் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள பிரதான மொழிகளிலும் வரண்னையாளர்களை நியமித்து போட்டியை ஒளிபரப்பு செய்யவுள்ளது.
வர்ணனையாளர்களின் இந்த நட்சத்திரக் குழு பார்வையாளர்களுக்கு கிரிக்கெட் மீதான அனுபவத்தை மேம்படுத்த உதவும் , WTC இறுதிப் போட்டிக்குரிய பரபரப்பையும் உற்சாகத்தையும் இந்த வர்ணனைக்குழு சேர்க்கும் என ஒளிபரப்பு நிறுவனங்கள் நினைக்கின்றன. மேலும், சிறந்த வர்ணனையாளர்களின் விரிவான பகுப்பாய்வு, சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் ஈர்க்கக்கூடிய விவாதங்ககளுடன் போட்டியை ரசிகர்கள் பார்க்கும் போது ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டியின் மீது தனி ஆர்வத்தினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
WTC 2023 இறுதி போட்டிக்கான வர்ணனை குழு
தமிழ்
யோ மகேஷ், சடகோபன் ரமேஷ், லட்சுமிபதி பாலாஜி மற்றும் ஸ்ரீதரன் ஸ்ரீராம்
இந்தி
ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி, தீப் தாஸ்குப்தா மற்றும் எஸ். ஸ்ரீசாந்த்
தெலுங்கு
கௌசிக் என்.சி., ஆஷிஷ் ரெட்டி, திருமலசெட்டி சுமன் மற்றும் கல்யாண் கே
கன்னடம்
விஜய் பரத்வாஜ், ஸ்ரீனிவாசா எம், பாரத் சிப்லி, பவன் தேஷ்பாண்டே மற்றும் சுனில் ஜோஷி.